#BREAKING: அதிர்ச்சி.. தமிழகத்தில் புதிய வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#BREAKING: அதிர்ச்சி.. தமிழகத்தில் புதிய வகை கொரோனா – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் தகவல்.

தமிழகத்தில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, தற்போது குணமாகிவிட்டதாக கூறினார்.

சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரையும் பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், புதிய வகை கொரோனா பரவும் தன்மையில் இல்லை என்றும் மற்ற மாநிலங்களில் ஓமைக்ரான் BA 4 கொரோனா வகை பரவி இருக்கிறதா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தும் எனவும் கூறியுள்ளார். ஆப்ரிக்கா நாடுகளில் கண்டறியப்பட்ட BA 4 கொரோனா வகை தமிழகத்திலும் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *