#Breaking:”தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடுக் தகவல்!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வகை வைரஸ் தான் பரவுகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:”ஒமிக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது.அதன்படி, BA1,BA2,BA3,BA4,XE உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று  உள்ளது.அந்த வகையில்,தற்போது தமிழகத்தில் பெரும்பாலும் 99% பேருக்கு BA2 வைரஸ் தான் உள்ளது.இது A வகை தான்.எனினும் மக்கள் அச்சப்பட தேவையில்லை”என்றும் கூறியிருந்தார்

இந்நிலையில்,தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில்:

“தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியுள்ளது.அதன்படி, 15 நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட புதிய வகையான BA4 வகை கொரோனா 4 பேருக்கும்,BA5 வகை கொரோனா 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து,உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.அவர்கள் நலமாக உள்ளனர்.இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை “,என்று கூறியுள்ளார்.

Leave a Comment