மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி …!

மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. தென் ஆபிரிக்க நாடுகளில் பரவி வரக்கூடிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளதுடன், விமான நிலையங்களிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஏற்கனவே 5 பேருக்கு நாடு முழுவதும் ஓமைக்ரான் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், … Read more

#BREAKING : டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி..!

கர்நாடகா, குஜராத்தை தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. மேலும், டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏற்கனவே கர்நாடகாவில் இரண்டு பேருக்கும், மகாராஷ்டிரா, குஜராத்தில்  ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியிலும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை – அமைச்சர்.மா.சுப்பிரமணியன்!

வெளிநாடுகளில் இருந்து கொரோனா தொற்றுடன் வந்த 3 பேருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை என அமைச்சர்.மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஓமைக்ரான் எனும் வகையில் பரவி வருகிறது. இந்த ஓமைக்ரேன் வகை வைரஸ் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால், தமிழகத்திற்குள் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு … Read more

அச்சுறுத்தும் ஒமைக்ரான்- தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் … Read more

ரிஸ்க் நாடுகளில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு கொரோனா..!

ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிஸ்க் நாடுகளில் இருந்து இன்று நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை லக்னோவைத் தவிர நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் மொத்தம் 11 சர்வதேச விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இவற்றில் 3476 பயணிகள் பயணம் செய்தனர். அனைத்து பயணிகளுக்கும் RT PCR சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 06 பயணிகளுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஓமைக்ரான் … Read more

#Omicron: டெல்லியில் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார்- அரவிந்த் கெஜ்ரிவால்..!

Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் டெல்லியில்  30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓமிக்ரான் மாறுபாட்டைச் சமாளிக்க மாநில அரசின் முன்னெச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,  அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினேன். Omicron இந்தியாவிற்கு வராது என்று நம்புகிறோம். ஆனால் பொறுப்பான அரசாங்கங்களாக நாங்கள் தயாராக இருக்க வேண்டும். படுக்கைகளைப் பொறுத்தவரை, நாங்கள் 30,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை தயார் செய்துள்ளோம். அவற்றில் … Read more

ஒமைக்ரானால் பள்ளி,கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..!

ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்த‌லால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை என்ற தகவல் தவறானது. கொரோனா வைரஸ் கடந்த ஒன்றை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் அச்சுறுத்தி வந்த நிலையில், தற்பொழுது குறைந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ்  கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் இது வேகமாகப் பரவலாம் என்றும் இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். இந்தப் புதிய வகை … Read more