#Breaking:”இனி கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணித்திடுக” -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை:கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள கனிமச் சுரங்கங்களின் நடவடிக்கைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்,பூமியின் கீழ் உள்ள சுரங்கங்கள்,கனிமங்கள் ஆகியன தேசத்தின் சொத்துகள் என்ற உயர்நீதிமன்றம்,தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் அதே வேளையில்,தேசத்தின் செல்வம் மற்றும் பொதுநலனையும் பாதுகாத்திட வேண்டும் என்றும்,தமிழகம் முழுவதும் சுரங்கங்களுக்கு உரிமத்தொகை நிர்ணயிக்க ட்ரோன் மூலம் அளவிட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு … Read more

அச்சுறுத்தும் ஒமைக்ரான்- தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் … Read more

கண்காணிப்புடன் பொங்கல் பரிசுப் பொருள்…..அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை மாவட்டத்தில் உள்ள  ஒண்டிபுதூர் பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.இதில் பங்கேற்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனைவருக்கும் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகையை வழங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த்துள்ளார்.