Free fire, PUBG India போன்ற விளையாட்டுகளை தடை செய்யவும் – பிரதமருக்கு கடிதம் எழுதிய நீதிபதி

புதுடெல்லி:குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்தகைய விளையாட்டுகள் “குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவர்களை இயந்திரங்களைப் போல ஆக்குகின்றன என நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் வளர்ச்சியில் பேரழிவு தரும் பாதகமான விளைவை ஏற்படுத்திய மோசமான விளையாட்டு PUBG மொபைலை தடை செய்த உங்கள் செயலை … Read more

வங்காளத்தில் கனமழைக்கு 15 பேர் பலி, 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்

மேற்கு வங்கத்தின் ஆறு மாவட்டங்களில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நிலைமை செவ்வாய்க்கிழமை மோசமடைந்ததால், 15 பேர் இறந்துள்ளனர், மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் மூன்று லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர், அதைத் தொடர்ந்து தாமோதர் பள்ளத்தாக்கு (டிவிசி) அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது, புர்பா பர்தமான், பாசிம் பர்தமான், பாசிம் மதினிபூர், ஹூக்லி, ஹவுரா மற்றும் தெற்கு மாவட்டங்களின் முக்கிய பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கின. ஹூக்லி மாவட்டத்தில் மட்டும் … Read more

சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம்..!

சத்தீஸ்கரில் ஆகஸ்ட் 8 முதல் விமானப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் அறிக்கை கட்டாயம் என சட்டீஸ்கர் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது, ஆகஸ்ட் 8 முதல் மாநிலத்திற்கு வருகை தரும் விமானப் பயணிகள் எதிர்மறை ஆர்டி-பிசிஆர் அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். சத்தீஸ்கர் திங்களன்று புதியதாக 236 பேருக்கு கொரோனா தொற்றும்  மூன்று இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு ஷாட்டுகளையும் எடுத்த பயணிகள் 96 மணி நேரத்திற்குள்  எடுத்த கோவிட் -19 எதிர்மறையான  பரிசோதனையின் அறிக்கையை அளிக்க … Read more

Tokyo Olympics:பளுதூக்கும் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த முதல் திருநங்கை பெண்

நியூசிலாந்தின் பளுதூக்குபவர் லாரல் ஹப்பார்ட்  ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வெளிப்படையான திருநங்கை பெண் என்ற பெருமையைப் பெற்றார்.பெண்கள் +87 கிலோ இறுதிப் போட்டியில் ஹப்பார்ட் போட்டியிட்டார் ஆனால் ஸ்னாட்ச் பிரிவில் அவரது மூன்று முயற்சிகளும் தோல்வியடைந்தன. 43 வயதாகும் ஹப்பார்ட் , நடந்து வரும் விளையாட்டுகளில் பளு தூக்குதல் போட்டியில் மூத்த போட்டியாளராவார்.

Tokyo Olympics: 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இத்தாலியரானார் மார்செல் ஜேக்கப்ஸ்

டோக்கியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக் ஆண்கள் 100 மீட்டர் இறுதிப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லாமண்ட் மார்செல் ஜேக்கப்ஸ் பந்தைய தூரத்தை 9.80 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்கன் ஃப்ரெட் கெர்லி 9.84 வினாடிகளில் வெள்ளிப் பதக்கத்துடன்,2016 ரியோ விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் 9.89 வினாடிகளில் கடந்து மீண்டும் பெற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இத்தாலியர் என்ற அரையிறுதியில் 9.84 வினாடிகளில் கடந்து … Read more

“கோழி, மட்டன், மீனை விட மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்”: மேகாலயா பாஜக அமைச்சர்

ஷில்லாங்: மேகாலயா அரசாங்கத்தின் பாஜக அமைச்சர் சன்போர் ஷுல்லாய் மாநில மக்களை கோழி, மட்டன் மற்றும் மீன்களை விட அதிக மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த வாரம் கேபினட் அமைச்சராகப் பதவியேற்ற மூத்த பாஜக தலைவர் திரு ஷுல்லாய், ஜனநாயக நாட்டில் அனைவரும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று கூறினார். “கோழி, மட்டன் அல்லது மீனை விட மாட்டிறைச்சி சாப்பிட நான் மக்களை ஊக்குவிக்கிறேன். மக்களை அதிக மாட்டிறைச்சி சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம், பசு … Read more

#Breaking:+2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி – தமிழக அரசு..!

பிளஸ் டூ தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு  அளித்து  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நமது மாநிலத்தில் 2021ஆம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதிலிருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்டு 2021 திங்களில் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17()-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதிலிருந்து … Read more

Tokyo Olympics:ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய நைஜீரிய ஸ்ப்ரிண்டர் ஒகாக்பரே- க்கு ஒலிம்பிக்கில் தடை

2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரிய ஸ்ப்ரிண்டர் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம். டோக்கியோ: நைஜீரிய ஸ்ப்ரிண்டர் மற்றும் 2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிளெஸ்ஸிங் ஒகாக்பரே ஊக்கமருந்து  மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது. 32 வயதான இவர், 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று தனது நான்காவது ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார், சனிக்கிழமை அரையிறுதிக்கு … Read more

தொடர்ந்து 13 வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் ,டீசல்

தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் 13 வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் விலை 94.39க்கும் விற்பனையாகிவருகிறது.மேலும் டெல்லியில் பெட்ரோல் ரூ.101.84க்கும், டீசல் விலை 89.87க்கும் விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.107.83க்கும், டீசல் … Read more

இமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று தலைமைச் செயலாளர் அனில் குமார் காச்சி கூறினார், மேலும் மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை தேடிவருவதாகவும் தெரிவித்தார்.இந்த பதினான்கு பேரில் லஹாலில் பத்து பேரும், குலுவில் நான்கு பேரும் இறந்துள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மோசமான வானிலை ஐஎம்டி கணித்துள்ளதால் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறு மக்களை தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 14 people … Read more