ஆபாச படத்தை வெளியீட்டு மருத்துவ மாணவியை மிரட்டிய வாலிபர் அதிரடி கைது

தாம்பரம்: சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் பல் மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பவித்ராவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன் முகநூலில் திருவான்மியூரை சேர்ந்த நிக்கில் ஜாட்டின் சர்மா (34) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் வெளியில் சென்று நெருக்கமாக செல்பி எடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிக்கிலை, பவித்ரா முகநூலில் இருந்து நீக்கியுள்ளார். … Read more

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்

சென்னை: செப்., 5 க்குள் முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.நோட்டீஸ்:முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியாக கவர்னர் வித்யசாகர் ராவிடம் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா, கார்பைன் முகுருஸா, ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, வீனஸ் வில்லியம்ஸ், எலினா ஸ்விட்டோலினா, போர்னா கோரிச், மரின் சிலிச், ஜான் மில்மானிடம், டொமினிக் தீம், டெனிஸ் ஷபோவெலாவ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மரியா ஷரபோவா 6-7 (4), 6-4, 6-1 என்ற … Read more

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது ஐசிசி; முதல் 10 இடங்களில் புஜாரா, கோலி, கே.எல்.ராகுல்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 10-வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடங்களை தக்கவைத்துக் கொண்டனர். ஆஸ்திரேலிய தொடக்க வீரர் … Read more

இலங்கைக்கு எதிரான 4-வது ஆட்டத்திலும் இந்தியாவுக்கு தான் வெற்றி; இன்னும் ஒரு ஆட்டம்தான் மீதி

இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றிப் பெற்றதன்மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கைக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோருக்குப் பதிலாக முறையே மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் டாஸ் வென்று முதலில் … Read more

மீண்டும் கோர முகத்தை காட்டிய புளூ வேல் !! புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர் தற்கொலை !!

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விளையாட்டு, ‘புளூ வேல்’. அதாவது, தமிழில் நீல திமிங்கலம் என்று சொல்லப்படும் இந்த ஆன்லைன் விளையாட்டு, விளையாடுபவர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது. விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்தும், தூக்கிட்டும்  தற்கொலை செய்து வருகின்றனர். … Read more

தர்மயுத்தம் நடத்துறேனு சொன்ன ஓபிஎஸ்-க்கு தர்மமாக துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது – ஸ்டாலின் தாக்கு

நாமக்கல்:தர்மயுத்தம் நடத்தப் போகிறேன் என்று சொன்ன முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு தர்மமாக துணை முதலமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்று  திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கட்சித் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைரவிழா பொதுக் கூட்டம் நேற்று திருச்செங்கோடு வாலரைகேட் கரட்டுப்பாளையம் பகுதியில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இந்த … Read more

தினகரனின் அறிவிப்பால் உதகையில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ரத்து

நீலகிரி:மாவட்டச் செயலாளர்களை தினகரன் நீக்கி அறிவித்ததால் உதகையில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது நிகழ்ச்சியின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சொன்ன தேதியில் நடக்குமா என்பதும் சந்தேகமே! மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தமிழக அரசு விழாவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி இவ்விழா நடைபெறுமென அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தன. பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டதோடு, … Read more

கிரிமினல் குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கப்படுமா ?

கிரிமினல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிடவும், கட்சிப் பதவி வகிக்கவும் தடை விதித்தால் அது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என ஆய்வு செய்து விரைவில் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள்  தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்க கூடாது என்றும் டெல்லியை சேர்ந்த, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், … Read more

ஆம்பியர் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைத் தயாரிக்கிறது..!

கோயம்புத்தூரில் உள்ள மின்சார வாகன உற்பத்தியாளர், ஆம்பிரி வாகனங்கள், இந்தியாவில் இரண்டு புதிய மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஆம்பியர் V48 மற்றும் ரோ லி-அயன் (Ampere V48 and the Reo Li-Ion) ஆகும். ஆம்பியர் V48 ₨ 38,000 விலை மற்றும் ரெவோ லி-அயன் ₨ 46,000 விலை. இரண்டு ஸ்கூட்டர்களும் ஒரு லித்தியம்-அயன் மின்கல பொதி சார்ஜரைப் பெறுகின்றனர். இந்த ஸ்கூட்டர்கள் எந்த பதிவும் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் 25 கி.மீ. மின்சார … Read more