அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா, கார்பைன் முகுருஸா, ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, வீனஸ் வில்லியம்ஸ், எலினா ஸ்விட்டோலினா, போர்னா கோரிச், மரின் சிலிச், ஜான் மில்மானிடம், டொமினிக் தீம், டெனிஸ் ஷபோவெலாவ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மரியா ஷரபோவா 6-7 (4), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டிமியா பபாஸை வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஷரபோவா தனது 3-ஆவது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனினை எதிர்கொள்கிறார்.
ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் டுயான் இங்கை வீழ்த்தி அமெரிக்க ஓபனில் முதல்முறையாக 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 4-6, 6-4, 7-6 (2) என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் மார்கெட்டா வோன்டாரெளசோவாவை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் டோடினையும், செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அலைஸ் கார்னெட்டையும் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா தனது முதல் சுற்றில் 6-0, 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் கேத்தரினா சினிகோவாவை தோற்கடித்தார்.
ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், குரோஷியாவின் போர்னா கோரிச்சிடம் மோதினார்.
இதில், 6-3, 5-7, 6-7 (1), 6-7 (4) என்ற செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோரிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்.
போர்னா கோரிச் தனது 3-வது சுற்றில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை சந்திக்கிறார்.
குரோஷியாவின் மரின் சிலிச் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஃபுளோரின் மேயரை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 14-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் தனது 2-வது சுற்றில் 3-6, 6-1, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஜான் மில்மானிடம் தோல்வி கண்டார்.
போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினார்.
கனடாவைச் சேர்ந்த 18 வயது தகுதி நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ் 6-4, 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் பிரான்ஸைச் சேர்ந்த முன்னணி வீரரான ஜோ வில்பிரைட் சோங்காவை வீழ்த்தினார்.
டெனிஸ் ஷபோவெலாவ், அடுத்ததாக பிரிட்டனின் கைல் எட்மான்டை சந்திக்கிறார். 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment