இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி..! 69 ஆண்டுகளுக்கு முந்தைய சுவாரசிய சம்பவம்..!

69 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு(1947) இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு எதிராக இது நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இந்த வரலாற்றுச் சம்பவம் மதராசப்பட்டினம்(சென்னை) MCC பெவிலியன் [எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்]-இல் 1952 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தேதியை அறிவித்தது ஐசிசி ..!

wtc final

இரண்டு வருட டெஸ்ட் கிரிக்கெட் அதன் முடிவை எட்டியுள்ள நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023 ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது, இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, மேலும் இரு அணிகளும் நாளை  முதல் நான்கு டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றன.ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more

#BGT2023: ரிஷப் பண்ட்டின் இடத்தை நிரப்புவாரா சூரியகுமார் யாதவ்? இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

suryakumar yadav

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டின் இடத்தை சூரியகுமார் யாதவ் நிரப்புவார் என இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். நாளை தொடங்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில், அறுவை சிகிச்சை காரணமாக இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தற்காலிக ஓய்வில் இருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்ற வீரர்களில் பண்ட்டும் ஒருவர். … Read more

துருக்கி நிலநடுக்கம் – துருக்கி விரைந்த இந்திய மருத்துவ குழு..!

turkey

துருக்கி இஸ்தான்புல்லுக்கு இந்தியத் தரப்பிலிருந்து மருத்துவர் குழு, அத்தியாவசிய மருந்துகளை அனுப்பியுள்ளது. துருக்கியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட  நிலையில், நேற்று மதியம் 3:45 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 3-வது முறையாக மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 6.0 ஆக பதிவாகியது. இந்த நிலையில், சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் துருக்கி மற்றும் … Read more

பிரிக்ஸ்-இல் சேர பல நாடுகள் விருப்பம்- தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர்.!

Brics sa

பிரிக்ஸ் அமைப்பில் சேர பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் எனும் பல நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதற்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்று தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பண்டோர் கூறியுள்ளார். இது பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், சீர்திருத்தத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற அதன் மதிப்புகளில் இந்த பிரிக்ஸ் அமைப்பு  வலுவாக இருக்கிறது என்பதற்கு இது தெளிவான அறிகுறியாகும் என்று அவர் கூறினார். பிரேசில், … Read more

17 பாகிஸ்தான் கைதிகளை திருப்பி அனுப்பியது இந்தியா..!

India repatriates Pakistani prisoners

அட்டாரி-வாகா எல்லை வழியாக 17 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா திருப்பி அனுப்பியது. இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான அட்டாரி-வாகா வழியாக 17 பாகிஸ்தான் கைதிகளை இந்தியா திருப்பி அனுப்பியுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 17 கைதிகள் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் உயர் மட்ட குழு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தரப்பிலிருந்து தங்களுக்கு கிடைத்த ஒத்துழைப்பு மூலம் பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகு அவர்களை தாய் நாட்டிற்கே திருப்பி அனுப்பியது. இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள … Read more

INDvsNZ ODI SERIES: 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி!

ind won kulddep

இந்தியா-நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இந்திய அணி ஏற்கனவே தொடரை 2-0 என வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா(101 ரன்கள்) மற்றும் கில்(112 ரன்கள்) ஆகியோரின் அதிரடி சதம் மற்றும் … Read more

INDvsNZ ODI SERIES: ரோஹித், கில் சதம்! இந்தியா அதிரடி ரன் குவிப்பு.!

rohit gill cent

இந்தியா-நியூசிலாந்து இடையே 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 385 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் … Read more

#INDvsNZ ODI: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

INDvsNZ3rdODi

இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 20.1 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையே மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று மத்தியப் … Read more

INDvsNZ ODI: ரோஹித், கில் அதிரடி! இந்தியா அபார வெற்றி.!

rohit gill hit

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, நியூசிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, தொடக்கத்திலிருந்தே தடுமாறி வந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வந்தனர். இதனால் … Read more