வங்காளத்தில் கனமழைக்கு 15 பேர் பலி, 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்

மேற்கு வங்கத்தின் ஆறு மாவட்டங்களில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் நிலைமை செவ்வாய்க்கிழமை மோசமடைந்ததால், 15 பேர் இறந்துள்ளனர், மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் சுமார் மூன்று லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர், அதைத் தொடர்ந்து தாமோதர் பள்ளத்தாக்கு (டிவிசி) அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது, புர்பா பர்தமான், பாசிம் பர்தமான், பாசிம் மதினிபூர், ஹூக்லி, ஹவுரா மற்றும் தெற்கு மாவட்டங்களின் முக்கிய பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கின.

ஹூக்லி மாவட்டத்தில் மட்டும் சுமார் 79,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அதேசமயம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்ட்டுள்ளன.முதல்வர் மம்தா பானர்ஜி, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை கண்காணிக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை அனுப்பிவைத்துள்ளார் .

author avatar
Dinasuvadu desk