#WeatherUpdate : வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை..!

tnweathertoday

தமிழகத்தில் இன்று முதல் 12ஆம் தேதி வரை வானிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து அடுத்த 5 நாட்களுக்கு (12.02.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று … Read more

எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள்.! டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.!

sylendra babu

எதிர்காலத்தில் அதிக அளவில் சைபர் குற்றங்களை தடுக்க கணினி பொறியாளர்கள் தேவைபடுவார்கள். – சென்னையில் நடைபெற்ற சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு.   நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரும் இந்த சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று அந்த … Read more

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள்.!

football

சென்னையில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது இல்லை. வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச கால்பந்காட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் பிப்ரவரி 15 மற்றும் 18ஆகிய தேதிகளில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய … Read more

அரசு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்.. ஊழியர்களை சுரண்ட கூடாது.! உயர்நீதிமன்றம் வருத்தம்.! 

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அரசு சுரண்டுவது இருக்கக்கூடாது. அரசு ஓர் முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும். – உயர்நீதிமன்றம்.  தமிழகத்தில் அண்மை காலமாக பல்வேறு மாவட்டங்களில் தூய்மை பணியாளர்கள் போராட்டங்கள் நடத்துவதும்,  தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் முன்வைத்து வருவதும் நடந்து வருகிறது. அதாவது தங்களுக்கு போதுமான ஊதியம் கிடைப்பதில்லை, அதிக வேலை பளு இருக்கிறது, வேலை நிரந்தரம் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தூய்மை பணியாளார்கள் முன்னிறுத்து வருகின்றனர். இதில், கோவை மாநகராட்சி தூய்மை … Read more

கோயம்பேடு சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா.! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!

CMBT SEKARBABU

கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் புதியதாக 8 ஏக்கர் பரப்பவு கொண்ட ஓர் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. – அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.  இந்தியாவில் மிக பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக செயல்படுவது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை. கிட்டத்தட்ட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் வரையில் இதன் வியாபர சந்தை மிக பெரியது. இந்த கோயம்பேடு சந்தையை மேம்படுத்தும் பணியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கான பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் … Read more

அண்ணா – எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட இடுகாட்டுப்பகுதி.! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!

மெரினாவிலுள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் நினைவிட வளாகம் அறிவிக்கப்பட்ட பகுதியானது இடுகாட்டுப்பகுதி என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் கடற்கரை பகுதிக்குள் கடலுக்குள் பேனா சிலை அமைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கூட தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் சார்பில் அண்மையில் சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே … Read more

சென்னையில் போலி போலீஸ்.. ரூ.1.5 கோடி கொள்ளை.! பலே திருடர்களை பிடிக்க தனிப்படை.!

tn police

சென்னை, சவுகார்பேட்டை அருகில் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ஒரு கும்பல் தங்களை  போலீஸ் என பொய் கூறி 1.40 கோடி ரூபாயை வழிப்பறி செய்துள்ளனர்.  சென்னை சௌகார்பேட்டையில் நகைகள் மொத்தமாக வாங்குவதற்கு வெளிமாநில வியபாரிகள்  வருவது வழக்கமான ஒன்று. அப்படி தான் வழக்கமாக ஆந்திராவில் இருந்து வரும் சுப்பாராவ் எனும் நகை வியாபாரி அண்மையில், தனது மேலாளர் ரகுமான் என்பவருடன் நகை வாங்க சென்னை வந்துள்ளார் . சென்னை, சவுகார்பேட்டையில் நகை வாங்க 1 கோடியே 40 … Read more

சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ATM..! 200க்கு பதில் 500 ரூபாய் நோட்டுகள்…!

500 rupees instead of 200 rupees notes

சென்னையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. வாடிக்கையாளர்களில் ஒருவர் அவருக்கு ரூ.8000 வேண்டுமென்று ஏடிஎம் இயந்திரத்தில் உள்ளிட்டுள்ளார். ஆனால் அவருக்கு இயந்திரத்திலிருந்து 20,000 ரூபாய் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த … Read more

பேனா சின்னம் விவகாரம்.! 14 துறைகளில் 2 துறைகள் மட்டுமே விளக்கம் அளித்துள்ளனர்.!

pen statue

பேனா சிலை தொடர்பாக 14 துறைகளிடம் தேசிய பசுமை தீப்பாயம் பதில் விளக்கம் கேட்ட்பட்ட நிலையில் 2 துறைகள் மட்டுமே பதில் விளக்கம் அளித்துள்ளனர்.  மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே மிகப்பெரிய பேனா சிலை அமைக்கும் விவகாரம் தொடர்பாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை அளித்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை … Read more

சென்னையில் இரண்டடுக்கு பிரமாண்ட மேம்பாலம்.! மத்திய அரசு அனுமதி.!

சென்னை  துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் உயர்மட்ட இரண்டடுக்கு பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரையில் சுமார் 20 கிமீ தூரத்திற்கு 2 அடுக்கு பாலம் அமைக்க அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 5885 கோடி ரூபாய் செலவாகும் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த திட்டத்திற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மதுரவாயல் பகுதியில் இருந்து சரக்கு கொள்முதல் வாகனங்கள் எளிதாக போக்குவரத்துநெரிசல் … Read more