என்னுடைய தந்தையை இழந்தது சாலை விபத்தில்தான்.! சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் உருக்கம்.!

சென்னையில் இன்று நம்ம ஹெல்மெட் எனும் பெயரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், ஹெல்மெண்ட் அணியாமல் தான் தற்போது அதிக விபத்து ஏற்படுகிறது. அதனை கட்டுப்படுத்த தான் நம்ம ஹெல்மெட் என்னு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாம் எப்படி சட்டை போடுகிறோமோ, அது போல தான் ஹெல்மெட் போடுவதும். நிறைய பேர் தற்போது ஹெல்மெட் போட ஆரம்பித்து விட்டனர். இது நம்ம உயிர், நம்ம ஹெல்மெட். எங்கள் கனவு சென்னையில் விபத்து விகிதம் குறைவு என்பது தான்.

இன்னைக்கு ஹெல்மெட் அணிவது எல்லாரும் கடைபிடித்து வருகிறார்கள். பல இரு சக்கர விபத்துக்களை பார்க்கிறோம், அவர்கள் எல்லாம் கூறுவது ஹெல்மெட் போட்டு இருக்கலாம், ஹெல்மெட் பிளாக் மாட்டி இருக்கலாம் என கூறுவது தான். ஏன், எங்க அப்பாவை இழந்தது கூட விபத்தில் தான். அப்போது தான் எனக்கும் ஹெல்மெட் முக்கியத்துவம் புரிந்தது என சென்னை கூடுதல் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உருக்கமாக பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.