சென்னை தினம்! புகைப்படம் கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

சென்னை தினம்! புகைப்படம் கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

chennaiday2023

சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வரும் 384-வது சென்னை தின கொண்டாட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னை பள்ளி மாணவர்களின் “அக்கம் பக்கம்” புகைப்படக் கண்காட்சியையும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் ஆவணப் புகைப்படங்களின் கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டு வருகிறார்.

சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் என கருப்பு, வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மேலும், “தி இந்து” குழுமத்தின் சார்பில் எபிக் சாகா ஆப் தி சோழாஸ் உள்ளிட்ட 3 புத்தகங்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனிடையே, சென்னை தின கொண்டாட்டத்தை ஒட்டி பாண்டி பஜாரில் உணவு திருவிழா திருவிழாவுக்கான  ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

1996ம் ஆண்டு ஜூலை 17-ல் கலைஞர் தலைமையிலான அரசு மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என்று அதிகாரப்பூர்வ பெயராக மாற்றியது. 2004-ல் சென்னை தின கொண்டாட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் ஆக.22ல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

Join our channel google news Youtube