இன்று இலங்கை செல்கிறார் அண்ணாமலை..! என்ன காரணம் தெரியுமா..?

annamalai bjp leader

விரைவில் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அண்ணாமலை பேட்டி.   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. அண்ணாமலை இலங்கை பயணம்  ஈரோடு கிழக்கில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும்,  இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று அண்ணாமலையும், மத்திய … Read more

ஜீன்ஸ் பேண்ட் இஸ்திரி முதல்… ரோட்டு கடை டீ வரையில்… இடைத்தேர்தல் பிரச்சார சுவாரஸ்யம்.!

ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரச்சாரங்களில் மக்களை கவர செய்த சின்ன சின்ன விஷயங்களை ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்து, அதன் பின்னர் வேட்பாளர்கள் யார் எல்லாம் போட்டியிடுவார்கள் என பார்த்து, அதன் பிறகு சிலர் போட்டியியில் இருந்து விலகி, வேட்பு மனு நிராகரிப்பு என கிட்டத்தட்ட பொதுத்தேர்தல் சுவாரஸ்யத்தை இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. திமுக … Read more

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரித்த ஆர்.பி.உதயகுமார்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளரான தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். டீ கடையில் ஆர்.பி.உதயகுமார் அந்த வகையில், … Read more

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு நிராகரிப்பு.! காரணம் இதுதான்….

ADMK OPS

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு ஏற்பு : இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே … Read more

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை – டிடிவி தினகரன்

TTV Dhinakaran 2

இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் பழனிசாமி தரப்பு வெற்றி பெறாது என டிடிவி தினகரன் பேட்டி.  சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் தேர்தல் ஆணையம் எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காததால், ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை  2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும். என்னிடம் யாரும் பேசி அமமுக வேட்பாளரை வாபஸ் பெற வைக்கவில்லை. ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தலில் … Read more

எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் – ஆர்.எஸ்.பாரதி

rsbharathispeech

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என ஆர்.எஸ்.பாரதி பேச்சு.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சூரம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆர்.எஸ்.பாரதி பேச்சு  அப்போது பேசிய அவர், … Read more

இடைத்தேர்தலில் பாஜகவை புறக்கணிக்கிறதா அதிமுக.? முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை..?

கூட்டணி கட்சியான பாஜகவின் பெயரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தவிர்த்து வந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கிறது. ஆதரவு அறிவித்த பின்னராவது இன்று முதல் அதிமுக – பாஜக இணைந்து செயல்படுமா என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் தற்போது அதிமுக கட்சியின் பின்புறம் பாஜக இருக்கிறது என்பதும், பாஜக தான் அதிமுக தலைமைக்கு ஆலோசனை வழங்குகிறது என்ற விமர்சனங்களும், அரசியல் வட்டாரத்தில் அவ்வபோது எழுகிறது.  அந்த மாதிரியான விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனமாக வழக்கமான … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – புதிய நீதி கட்சி ஆதரவு இவர்களுக்குத்தான்..!

ac shanmugam

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி அதிமுகவுக்கு ஆதரவு.  ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதான கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவை பொறுத்தவரையில், நீண்ட இழுபறிக்கு பின், ஈபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய நீதி கட்சி அதிமுகவுக்கு ஆதரவு  இந்த நிலையில், புதிய … Read more

ஈபிஎஸ் – ஓபிஎஸ் சந்திப்புக்கு வாய்ப்பில்லை – ஜெயக்குமார்

திமுகவின்  பி-டீமாக இருந்து வரும் பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி மேற்கொள்கிறார் என ஜெயக்குமார் பேட்டி.  தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் சந்தித்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் மனு அளித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் … Read more

ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறுமா..? – கு.ப. கிருஷ்ணன் பதில்

kp kirushnan

உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தீர்ப்பு மட்டும்தான் என கு.ப.கிருஷ்ணன் பேட்டி.  ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு செல்வதற்கு முன்பதாக அவரது பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஓபிஎஸ்-யிடம் செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து பரப்புரை மேற்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு … Read more