ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது – அமைச்சர் அன்பில் மகேஸ்

Anbil Mahesh

Public Exam: ரமலான் அன்று பொதுத்தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு, இன்று மயிலாடுதுறை மாவட்டம் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அலைதான் வீசுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் பெரும் ஆதரவு தருகின்றனர். மக்கள் தயாராக இருக்கிறார்கள், இன்றே … Read more

பிரதமர் வாய்ப்பு வந்தால் தட்ட வேண்டாம் – மாநாட்டில் அன்பில் மகேஷ் பேச்சு.!

Anbil Mahesh - mk stalin

இன்று சேலத்தில் நடைபெற்று வரும் இளைஞர் அணி மாநாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் முதல்வர் ஸ்டாலின் அடுத்த பிரதமராக வாய்ப்பு இருப்பதாக கூறிஉள்ளார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு  நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணி அளவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக்கொடி ஏற்றி வைத்து இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாடு பந்தலுக்குள் 1.5 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே எல்இடி திரைகள் … Read more

பொதுத்தேர்வு தேதி…மாணவர்களுக்கு புதிய செயலி – அன்பில் மகேஸ்.!

anbil mahesh poyyamozhi

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். மேலும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை நேரடி பயனாளர் பணப் பரிவர்த்தனை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையவழி குறைதீர் புலம் … Read more

தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

anbil mahesh poyyamozhi

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தற்பொழுது, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்தும், ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கனமழை வெள்ளம் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, … Read more

துணை முதல்வர் போல உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் போல செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  திருச்சியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக மட்டுமல்லாமல், சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கும் அமைச்சராக இருப்பதால் கிட்டத்தட்ட துணை முதல்வர் போல செயல்பட்டு வருகிறார் என புகழ்ந்து … Read more

ஜேஇஇ தேர்வில் சிக்கல்.? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!

ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது. ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு … Read more

உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வாழ்த்துகிறேன்.! அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி.!

கலைத்திருவிழாவில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்று வெளிநாடு சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும். அதன் பிறகு உலக அளவில் சாதனை செல்வங்களாய் விளங்க வேண்டும். – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விசிட் அடித்து ஆய்வு செய்து மாணவ மாணவியர்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதன்படி, இன்று திருச்செந்தூர் வந்திருந்த அவர் பிரசித்திபெற்ற முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் … Read more

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசு பள்ளி என்பது வறுமை அடையலாம் அல்ல, பெருமை அடையாளம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியவர், தமிழக முதல்வர் கல்வி மருத்துவம் ஆகிய இரண்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நாடுகள் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள்.  நம்மிடம் உள்ள ஆயுதத்தை பார்த்து அல்ல. நம்மிடம் உள்ள இளைய சமுதாயத்தை பார்த்து தான்.  … Read more

அரசு பள்ளி மாணவர்கள் 87 பேர் ஐஐடி-க்கு தேர்வு.! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்.!

தாட்கோ மூலமாக படித்து மொத்தம் 87 அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடியில் படிக்க தேர்வாகி உள்ளனர். – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்  கழகம் சார்பில் முதலாவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா லோகோவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த நிகழ்வை அடுத்து செய்தியாளர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில், சென்னையில் ஒலிம்பியாட் … Read more

மாதா, பிதா, கூகுள், தெய்வம்.! மாணவர்ளின் குரு கூகுள் தான்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு … Read more