‘மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

tn health

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், 18 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எனவே, இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்) உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலானது ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ம் தேதி கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் மிக்ஜாம் … Read more

நாளை முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பொது சுகாதாரத்துறை!

நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர், தமிழகத்தில் ஓமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி முதல் (நாளை) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என … Read more

தமிழ்நாட்டில் மேலும் 22,238 பேருக்கு கொரோனா..38 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு தொற்று உறுதி. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இன்று ஒரேநாளில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா … Read more

மூன்றாவது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு தேவை – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!

புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். மூன்றாவது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று … Read more

#BREAKING: தமிழகத்தில் குறையும் கொரோனா.. ஒரேநாளில் 24,418 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,03,702 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 26,533 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று 24,418 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. … Read more

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 32,79,284 -ஆக உயர்வு. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 26,533 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 28,515-ஆக இருந்த நிலையில், இன்று 26,533-ஆக குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 32,79,284 -ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 48 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்த பலியானோர் … Read more

#BREAKING: தமிழகத்தில் 30,000க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த நாட்களாக 30 ஆயிரத்திக்கும் மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, 29,976 ஆக உள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,24,236 ஆகவும், கடந்த 25 மணி நேரத்தில் 47 பேர் … Read more

தமிழகத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 40 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 31,33,990 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 30,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 1,57,732 மாதிரிகள் டபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 30,580 ஆக உள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,744 ஆக இருந்த நிலையில், இன்று 30,580 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் … Read more

#BREAKING: தமிழகத்தில் மேலும் 29,870 பேருக்கு கொரோனா.. 33 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்த எண்ணிக்கை 30,72,666 ஆக உயர்வு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள நிலையில், மேலும் 33 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 28,561 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 29,870 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 33 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த … Read more

#BREAKING: தமிழகத்தில் ஒரே நாளில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் ஒரே நாளில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 28,29,655 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பதிப்பில் இருந்து 3,043 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 27,17,686 பேர் குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை … Read more