மாணவர்கள் கவனத்திற்கு…இன்று முதல் பள்ளி,கல்லூரிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இன்று முதல் அனைத்து பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர்  முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.பின்னர்,தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கிய நிலையில்,மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இன்று (பிப்.1ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் … Read more

சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவு ரத்து – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சென்னை:பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் சட்ட விரோதமாக செயல்படும் சங்கங்களின் பதிவை ரத்து செய்வதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன் அருள் அவர்கள்,அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர் மற்றும் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறியுள்ளதாவது: “தமிழ்நாடு சங்கங்களின் பதிவு சட்டம், 1975-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட பொழுதுபோக்கு சங்கங்கள்/மனமகிழ் மன்றங்கள் (Recreation … Read more

586 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பள்ளிகள்…! மாணவர்களுக்கு அதிரடியான வரவேற்பு…!

586 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு அதிரடியான வரவேற்பு.  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பு தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 500 நாட்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து, நவ.1-ஆம் தேதி முதல் 1-8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த … Read more

மூக்கு சொறிதல், தலை கோதுதல் கூடாது – தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து,அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி,கல்லூரிகள் செயல்படாமல் இருந்ததை போன்று அங்கன்வாடி மையங்களும் மூடப்பட்டிருந்தது. எனினும்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில்,அங்கன்வாடி மையங்களையும்  செப்டம்பர் 1 முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,அதற்கான,வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி, … Read more

செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்  கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, செப்.6-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கல்லூரிகளிலும், வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஆய்வகங்கள் கிருமிநாசினி கொண்டு … Read more