செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, செப்.6-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

  • அனைத்து கல்லூரிகளிலும், வகுப்பறைகள், நாற்காலிகள், விளையாட்டுப்பொருட்கள் மற்றும் ஆய்வகங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • கொரோனா  சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
  • மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டு இருப்பது கட்டாயம்.
  • மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை.
  • தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • நோய் தொற்று உள்ள மாணவர்களை கண்டறிந்தால் அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்.
  • பெற்றோர், ஆசிரியர் கூட்டம் கூட்டி கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.