ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!

ராஜேந்திர பாலாஜி ஜாமீன் வழக்கு ஜனவரி 12-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர், பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இதனால், 8 … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார்..!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறது.  தனிப்படை முகாமிட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி  வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க இன்று விமான நிலையங்களுக்கு  … Read more

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது – காவல்துறை தகவல்..!

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கூறியதாகவும், அதனால் பலரிடம் பணம் வாங்கி ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும் விஜயநல்லதம்பி கூறினார். நான் கொடுத்த 3 கோடியை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை என விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இந்த புகார் அடைப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர், ராஜேந்திர … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்துசேர்ப்பு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73% சொத்துசேர்த்துள்ளார் என தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோது வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் லஞ்சஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீத்திபதிகள் கொண்ட அமர்வில் இரு … Read more

#BREAKING: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு- 3வது நீதிபதி நியமனம்..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க 3-வது நீதிபதி நிர்மல்குமார் நியமனம் செய்யபப்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  அமைச்சராக இருந்தபோது,அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக மகேந்திரன் என்பவர் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  உத்தரவிட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இரு நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் … Read more

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமை இல்லை -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் யாருக்கும் அடிமையாக இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை வருகின்ற மே 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  வாக்கு எண்ணிக்கை தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி , தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுக … Read more

“மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும்” – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கருத்து தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் இரண்டு இறங்களில் இன்று அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அவர், மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் … Read more

கிளினிக் திறப்பு விழா… குழந்தை போல பலூன் உடைத்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி..!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவரின் பேச்சு எந்த அளவிற்கு அதிரடியாகப் பேசுவாரோ, அதே அளவிற்கு காமெடியாகவும் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதியில் “மினி கிளினிக்” திறப்பு விழா நடைபெற்றது. இந்த “மினி கிளினிக்”  திறந்துவைக்க அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு ரிப்பன் வெட்டுவதற்கு முன் நிலைப்பகுதியில் இருபுறம் இருந்த அலங்கார பலூன்களை சிறு குழந்தைகள் விளையாடுவது போல, ஒவ்வொன்றாகக் கத்திரிக்கோலால் குத்தி உடைத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்றார். அங்கு … Read more

அருப்புக்கோட்டையில் ராஜேந்திர பாலாஜி உருவபொம்மை எரிப்பு..!

நேற்று விருதுநகரில் செய்தியாளர் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராஜா மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று அருப்புக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திமுகவை அவதூறாக விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தனர். பின்னர், காவல்துறையினர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மையை அணைத்து கைப்பற்றி, திமுகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம்

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பால்வளத்துறை அமைச்சராக  ராஜேந்திர பாலாஜி பதவி வகித்து வருகிறார்.இவருக்கு அதிமுகவில்  விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஒரு சில காரணங்களால்  அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை  அறிவித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.மாவட்ட செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமனம் … Read more