#BREAKING : விதிகளை மீறி பேனர் வைக்க அனுமதிக்க கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விழுப்புரத்தில் பேனர் வைப்பதற்காக சென்ற போது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைக்க கூடாது என்று கழகத்தினருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், அதே போல் பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறியுள்ளதாக  தெரிவித்தனர்.

அனைத்து கருத்துக்களை பதிவு செய்த நீதிபதிகள், விதிகளை பின்பற்றாமல்  பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்றும், பேனர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்று முதல்வர் கூறினால் போதாது, கடுமையான நடவடிக்கை தேவை என்றும், சட்டவிரோத பேனர் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது ஆளுங்கட்சிக்கு மட்டுமான அறிவுறுத்தல் கிடையாது. அனைத்து கட்சிக்குமான அறிவுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.