ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது – காவல்துறை தகவல்..!

ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக விருதுநகர் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் கூறியதாகவும், அதனால் பலரிடம் பணம் வாங்கி ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும் விஜயநல்லதம்பி கூறினார். நான் கொடுத்த 3 கோடியை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை என விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இந்த புகார் அடைப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

பின்னர், ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் கைது செய்துவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய் நல்லதம்பி தான் குற்றவாளி. ராஜேந்திர பாலாஜிக்கு இதில் தொடர்பில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என தெரிவித்தார்.

காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நல்ல தம்பியும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

author avatar
murugan