கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு…!

கோயம்பேடு சந்தையில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.

தக்காளி விலை குறையும் வரை பொதுநலன் கருதி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளிகளை கொண்டுவந்து இறக்குவதற்கு லாரிகளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி  குழுமத்திற்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் பேரில் இன்று காலை 4 மணி முதல் அடுத்த  நான்கு வாரத்திற்கு தக்காளி லாரிகளை அந்த ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அந்தவகையில் காலை இடம் ஒதுக்காததற்க்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி இறக்குமதிக்கு வரும் லாரிகளுக்கு என ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது என கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.