முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் – அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிசாலைகளாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6,700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும். போக்குவரத்து நெரிசல்  சாலைகள் தேர்வு செய்யப்பட்டு அகலப்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்துதல், மரம்வெட்டும் பணிகள் இருந்தால் அவை முடிந்த பின்னரே சாலை விரிவாக்கம் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.