தொடர் ரயில் விபத்துக்கள்.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

Nov 6, 2023 - 06:22
 0  0
தொடர் ரயில் விபத்துக்கள்.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். இதுக்கு அடுத்து கடந்த மாதம் ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்துகள் தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மத்திய நாடாளுமன்ற குழு தலைவர் ஓம் பிர்ல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் நடப்பாண்டில் இரண்டு பெரிய ரயில் விபத்துகள் நடந்து ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இந்த ரயில் விபத்து காரணமாக ரயில் பயணிகளுக்கும், ரயில்வே துறைக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டது.

கடந்த ஜூன் 2ஆம் தேதி அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 296 பேர் உயிரிழந்தனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். 1995 ஆம் ஆண்டு நடந்த விபத்துக்கு பிறகு நடந்த மிகப்பெரிய ரயில் விபத்து இதுவாகும். சர்வதேச அளவில் 2004க்கு பிறகு நடந்த மோசமான விபத்து இதுவாகும்.

இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் அதன் சமீபத்திய நிலவரம் என்ன என்பது தெரியவில்லை. இரண்டாவது, ரயிலில் விபத்து கடந்த 29.10.2023 அன்று நடைபெற்றது விஜயநகரம் அருகே நடந்த இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஒடிசா ரயில் விபத்தை போல ஆந்திர ரயில்வே பத்திலும் மனிதத் தவறு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இரண்டு விபத்துக்களுமே மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. ஐந்து மாத இடைவெளியில் இந்த இரண்டு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கள் தொடர்பாக நாடாளுமன்ற ரயில்வே நிலைக் குழு விவாதிக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும் இந்த ரயிலு விபத்துகளின் உண்மையான பின்னணிகளை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். எதிர்காலத்தில் இந்த மாதிரியான விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் ஐந்து மாதம் கடந்தும் இன்னும் அது மாதிரியாக எதுவும் நடக்கவில்லை. இதில் சபாநாயகர் தலையிட்டு நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow