தொடர் ரயில் விபத்துக்கள்.. சபாநாயகருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு.!

DMK MP TR Balu

கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். இதுக்கு அடுத்து கடந்த மாதம் ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்துகள் தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மத்திய நாடாளுமன்ற குழு தலைவர் ஓம் பிர்ல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். டி.ஆர்.பாலு … Read more

#BREAKING : மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 பேர் இடைநீக்கம் – சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட 4 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே மக்களவை மற்றும் மாநிலநக்கலவை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னெழுப்பி அமளியில் ஈடுப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் முழுவதும் இரு அவைகளும் முடங்கியது. இன்று அதே சூழல் தான் மக்களவை கூடிய போது ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா பதாகைகளை ஏந்தி வருவது, அவைத்தலைவர் … Read more

#BREAKING: நாடாளுமன்றத்தில் கடும் அமளி… இரு அவைகளும் 8வது நாளாக முடக்கம் – சபாநாயகர் எச்சரிக்கை

மக்களவை, மாநிலங்களைவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் இரு அவைகளும் 8வது நாளாக இன்றும் முடங்கியது. நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் எதிரிக்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் இரு அவைகளையும் பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில ஆவணங்களையும் எதிரிக்கட்சியினர் கிழித்து … Read more

#BREAKING: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா..!

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது  சபாநாயகர் ஓம் பிர்லா உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜன. 29ல் அனைத்துக் கட்சி கூட்டம் – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

மக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜன.29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 … Read more

காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை ரத்து

காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். சபாநாயகர் பொறுப்பில் இருந்த ரமாதேவி கையில் இருந்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும்  நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்தார் . இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை ரத்து செய்துள்ளார் சபாநாயகர்  … Read more

“அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்” – துணை சபாநாயகர் ரமாதேவி பேச்சு!

நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் … Read more

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு

17-வது  மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும்  மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக  நடைபெற்று வந்தது.கடந்த 17 -ஆம் தேதி மக்களவை கூடியது. இதனால் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டார். புதிய எம்.பிக்களுக்கு … Read more