1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. […]
கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1200 பேர் படுகாயம் அடைந்தனர். இதுக்கு அடுத்து கடந்த மாதம் ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் விபத்துகள் தொடர்பாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மத்திய நாடாளுமன்ற குழு தலைவர் ஓம் பிர்ல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். டி.ஆர்.பாலு […]
நேற்று முன்தினம், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களைக் கைது செய்திருப்பதோடு அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் பறிமுதல் செய்துளளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யுமாறு, ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், இந்த மாதம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 10 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட […]
நாளைக்குள் அறிவாலயம் வந்து மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு. தமிழகத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக திமுக தலைமை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அழைப்பு. டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு டிஆர் பாலு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். திமுக அலுவலகம் திறப்பு விழா தொடர்பாக டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து டிஆர் பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்பிக்கள் அழைப்பு விடுத்தனர். இதுபோன்று ராகுல் காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை கட்சியின் […]
தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு மாலை வருவதாக தி.ஆர்.பாலு பேட்டி. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். […]
மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா தொடர்பாக விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை […]
இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இதனிடையே 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். […]
அக்டோபர் 14-ஆம் தேதி திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் என்று டி.ஆர்.பாலு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன. இதனிடையே 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு […]
திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .இதனிடையே திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். எனவே திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் […]
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அருண் ஜெட்லி உயிரிழந்துள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அருண் ஜெட்லியின் மறைவிற்கு பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழகத்தின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்களில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி வரியை அறிமுகப்படுத்தியவர். கொள்கை வேறுபாடு கொண்டவர்களிடமும், அன்பாக பழகக் […]
இன்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.ஆனால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது தொடர்பான விவாதத்தில் மக்களவை திமுக எம்.பி-க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் தலைவர்களான உமர் அப்துல்லா ,மெகபூபா முப்தியை நிலைமை என்ன? என்றும் வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்களா என்பதை […]