திருச்சியில் சிக்கிய 100 கிலோ ஹாஷிஷ் போதைப்பொருள்.. 876 கிலோ கஞ்சா.!

Trichy Customs : திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை அருகே போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்து, அங்குள்ள பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

Read More – நாட்டையே உலுக்கிய சிறுமி பாலியல் கொலை..! சோப்பை விழுங்கி குற்றவாளி தற்கொலை நாடகம்

அப்போது , மீமீசல் பகுதி ஈரல் பண்ணையில் சுங்கத்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் 100 கிலோவுக்கு அதிகமான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. இந்த போதை பொருளானது, கடல் வழியாக இலங்கைக்கு கடத்தல் செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும்,இது தொடர்பாக கடற்கரையோரத்தில் உள்ள மீனவ கிராமங்களிலும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி தலைமறைவாக உள்ள சுல்தான் என்பவரைதேடி வருகின்றனர்.

திருச்சி சுங்கத்துறையினர் கைப்பற்றிய போதை பொருட்கள் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோகிராம் ஹாஷிஷை எனும் போதை பொருள்,  1.05 கோடி ரூபாய் மதிப்புள்ள 876 கிலோ கஞ்சா ஆகியவற்றை மிமிசலில் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் தடை சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More – தேர்தல் பத்திரங்கள்… நாளை தான் கடைசி.! ஸ்டேட் பேங்கிற்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்.!

முன்னதாக, டெல்லில் பிடிபட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் எனும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் அண்மையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment