தரம்சாலா : ஐபிஎல் 2026 தொடரின் முதல் பிளே ஆப் போட்டியான Qualifier 1-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று தரம்சாலாவில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த சீசனில் தொடக்கம் முதலே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்று முழுவதும் பிளே ஆப் இடத்தை தக்க வைத்திருந்த பெங்களூரு அணி, இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து Qualifier 1-க்கு முன்னேறியது.

மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி சீசன் தொடக்கத்தில் தடுமாறினாலும், இரண்டாம் பாதியில் அதிரடியான கம்பேக் கொடுத்தது. குறிப்பாக கடைசி 7 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்ததுடன், தொடர்ந்து 5 வெற்றிகள் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு வலுவாக முன்னேறியது.

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, 18 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்தது. அதே புள்ளிகளுடன் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் இருந்த நிலையில், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி முதலிடத்தை பிடித்தது.

இந்த சீசனில் லீக் சுற்றில் ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகள் இருமுறை மோதியுள்ளன. அந்த இரு போட்டிகளிலும் chasing செய்த அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது தரம்சாலா HPCA மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி நடுநிலை மைதானத்தில் நடைபெறுவதால், இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

தற்போதைய பார்ம் அணியின் பேட்டிங் பலம் மற்றும் பவுலிங் பலம் ஆகியவற்றை பார்க்கும்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கே சற்று முன்னிலை இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, குஜராத் அணியின் bowling unit இந்த சீசனில் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டுள்ளது. அதேசமயம், சுப்மன் கில், சாய் சுதர்சன், டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் பேட்டிங்கிலும் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

ஆனால், ஆர்சிபி அணியை எளிதாக கணிக்க முடியாது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் எந்த நேரத்திலும் போட்டியை மாற்றும் திறன் கொண்டவர்கள். அதனால், “டேஞ்சரஸ்” ஆர்சிபி அணிக்கே இருப்பதாக கூறப்படுகிறது.

சில prediction models படி:

என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பிளே ஆப் அனுபவம் யாருக்கு அதிகம்?

ஆர்சிபி அணி இதுவரை 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் 2025ஆம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. மேலும், 4 முறை இறுதிப்போட்டிக்கும் சென்றுள்ளது.

மறுபுறம், குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 3 சீசன்களில் விளையாடியிருந்தாலும், 2022ஆம் ஆண்டு கோப்பையை வென்றதுடன், 2 முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதனால், இன்று நடைபெறும் போட்டி மிகவும் கடுமையான மோதலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.