பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் நேற்று குஜராத் அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு (ஆர்சிபி) அணி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 169/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, […]
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி வருவதற்கு காரணமே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியது தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவித்தது. எனவே, குஜராத் அணி அவரை 12.25 கோடி கொடுத்து வாங்கியது. எனவே, குஜராத் அணிக்கும் […]
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 ஓவருக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. RCB-ல் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 […]
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது. குறிப்பாக விராட் கோலி, படிக்கல், […]
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் 2025-ல் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்ற RCB முதன் முதலாக தங்கள் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. மேலும், பெங்களூரு மைதானமானது பேட்டிங்கிற்கு பெயர் போன மைதானம். இதன் சுற்றளவு 55 முதல் […]
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் 2025 தொடரில் பெங்களூரு அணி முதல் போட்டியியிலேயே நடப்பு சேம்பியன் கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலியே வீழ்த்தியது. அடுத்து சென்னை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் தனது முந்தைய போட்டியில் […]