உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது – வைகோ

உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மருத்துவப் … Read more

எச்சரித்துள்ள வைகோவிற்கு நன்றி – திருமாவளவன் ட்வீட்

உண்மையைத் திரிக்கும் சனாதனிகளையும், துணைபோகும் ஆட்சியாளர்களையும் எச்சரித்துள்ள வைகோவிற்கு நன்றி என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார் – வைகோ திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். மேலும், அவர் கூறுகையில் ,மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே … Read more

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா? வைகோ கண்டனம்.!

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நல்வாழ்வுத் துறையின் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் என்ற கிளை அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதுமான கிராமப்புறங்களுக்கு தேவையான நல்வாழ்வு பணிகளையும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் அக்டோபர் 8 முதல் 24 ஆம் தேதி … Read more

தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார் – வைகோ

திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று  வைகோ தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்  6 … Read more

இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி – மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்.!

இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் எம்.பி வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம்,  இந்தி, ஆங்கிலம் … Read more

தன்னால் முடிந்தளவு மக்களுக்கு உதவியவர் வசந்தகுமார்.! – வைகோ இரங்கல்.!

உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர் ஆவார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர் திரு.வசந்தகுமார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக கட்சியின் … Read more

மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் மிரட்டல் – வைகோ கண்டனம் 

இந்தி மொழி விவகாரம் தொடர்பாக பேசிய வைகோ, மமதை, ஆணவத்தோடு மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்ய ராஜேஷ் மிரட்டியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் நடைபெற்றது. இந்த பயிற்சியில் வகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 37 பேர் பங்கேற்றனர். அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அந்நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு – அரசியல் கட்சியினர் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு தெரிவித்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கருத்து … Read more

ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – வைகோ

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. … Read more

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை விரைந்து மீட்க வேண்டும் – வைகோ!

ரஷ்ய ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து மீட்கவேண்டும் என வைகோ வலியுறுத்தல். ரஷ்யாவில் வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள வோல்கோகிராட் மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன் விக்னேஷ் ஆகிய நான்கு மாணவர்களும் கடந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிப்பதற்காக வோல்கா ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்கள் நால்வரும் அடித்துச் செல்லப்பட்டு … Read more