பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள்!

thol thirumavalavan

தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி … Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்!

vijayakanth

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். கடைசியாக கடந்த கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வீடு திரும்பினார். நேற்று மீண்டும் மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து 2 நாட்களில் … Read more

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது.! திருமாவளவன் கடும் விமர்சனம்.!

பாபர் மசூதி இடிப்புக்கு அம்பேத்கார் நினைவு நாளை தேர்வு செய்தது போல, தமிழக RSS அமைப்பு ஊர்வலத்திற்கு காந்தி பிறந்தநாளை தேர்வு செய்துள்ளனர். – விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டிருந்தார்.  வரும் அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உள்ளனர். இந்த ஊரவலத்திற்கு அனுமதி கொடுத்ததை திரும்ப பெறுமாறு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார் இந்நிலையில், நேற்று  சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் … Read more

“தாலிக்குத் தங்கம் தொடர்ந்து வேண்டும்;தொலைநோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை” – விசிக தலைவர் பாராட்டு!

2022-23- ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன. இந்நிலையில்,தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தும் தொலை நோக்கு கொண்ட நிதிநிலை அறிக்கை இது.இதை அளித்த முதலமைச்சர்,நிதி அமைச்சர்,நிதித்துறை செயலாளர் ஆகியோருக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியதாவது: இது வெறும் வரவு செலவு கணக்காக அல்ல: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது ஒரு சமூகநீதி … Read more

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் நடந்த சம்பவம் தவறானது – தொல்.திருமாவளவன்

நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து. தருமபுரி அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் திமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு … Read more

“கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை; குற்றவாளிகள் இதனைப் பயன்படுத்தி தப்பிவிடக் கூடாது” – விசிக தலைவர் வலியுறுத்தல்..!

கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் கடலூர் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்,கண்ணகி -முருகேசன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், மேல்முறையீட்டில் தப்பித்து விடாதவகையில் இந்த வழக்கை உரிய முறையில் நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: “கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டை கண்ணகி -முருகேசன் சாதிமறுப்புத் திருமணத் தம்பதியினரை ஆணவப் படுகொலை செய்த … Read more

“அண்ணா பிறந்த நாளில் விடுதலை;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் திருமாவளவன்..!

அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என முதல்வர் அறிவித்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக அண்ணா பிறந்தநாளில் 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என அறிவித்துள்ளார். இந்நிலையில்,முதல்வரின் இந்த அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி … Read more

“நீட் தேர்வு விலக்கு மசோதா நாளை தாக்கல்;முதல்வருக்கு நன்றி” – விசிக தலைவர் தொல்.திருமாவளவன்..!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா தாக்கல் செய்யவுள்ளது என்ற முதல்வரின் அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். இன்று இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான சிவகுமார் – ரேவதி தம்பதியின் மகனான தனுஷ், கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவர் ஆக வேண்டும்  கனவுடன் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். … Read more

“சொந்தமாக நிலமோ,வீடோ இல்லாத இந்தியர்கள் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது” – விசிக தலைவர் திருமாவளவன்..!

சிஏஏ சட்டத்தால் சொந்தமாக நிலமோ,வீடோ இல்லாத இந்தியர்கள் குடியுரிமையை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த தீர்மானத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்நிலையில்,குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வந்ததற்கு,தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரவேற்கிறோம்: “குடியுரிமைத் … Read more