ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – வைகோ

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்பால், தூத்துக்குடி மக்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை  என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலை திறக்க கூடாது என உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.’ என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.