சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு.!

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுப்பு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்