கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்ததாக நடிகர் கமல்ஹாசன் பேசியது கன்னட அமைப்பினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதனால், அவர் நடித்த தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், […]
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை தெரிவித்ததற்காக அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் இன்றைய தினம் தானாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன் மற்றும் அனுராதா சுக்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய மத்தியப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது. அன்படி, இந்த வழக்கில் கடுமையான […]
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற ‘வீர ராஜா வீர’ பாடலின் இசையமைப்பை மீறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட பதிப்புரிமை மீறல் வழக்கில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மீது டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது . 2023 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர், தனது தந்தை […]
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த […]
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் பிரபலமானவர். ஆனால் சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு பரபரப்பான செய்தி அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு லூதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கன்னாவிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு […]
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவரை 7 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டியை நீதிமன்ற வளாகம் முன்பு அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை […]
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் பட்டப் பகலில் நடந்த இந்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மாயாண்டி என்ற அந்த இளைஞரை வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் காரில் தப்பி சென்றனர். பின்னர், காவல் துறையினர் அவர்களை […]
சென்னை: யூடியூப் சேனல்களில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகர் வடிவேலு, 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கானது கடந்த 6-தேதி விசாரணைக்கு வந்த நிலையில், வடிவேலு குறித்து எந்தவிதமான அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என உத்தரவாதம் அளிக்கும்படி சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11 ஆம் தேதி) ஒத்தி வைத்தார். அதன்படி, […]
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். சில தினங்களுக்கு முன், கைதான கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே, […]
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு பேசும் சமூகத்தினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கஸ்தூரி சங்கரை ஹைதராபாத்தில் போலீஸார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, ஹைதராபாத்தில் படத் தயாரிப்பாளர் வீட்டில் மறைந்திருந்தாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு […]
சென்னை : தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா விற்கப்பட்டதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். தற்போது, கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், […]
சல்மான் கான் : சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 4 பேரை நவி மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரபல கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தனஞ்சய், வாஸ்பி கான், ரிஸ்வான் கான் மற்றும் கௌரவ் பாட்டியா என […]
Darling: முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 354 (A)-ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது, கொல்கத்தாவில் மது போதையில் பெண் காவலரை ‘டார்லிங்’ என அழைத்த நபருக்கு 1 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. READ MORE – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.! கடந்த 2015ம் ஆண்டு துர்கா பூஜையை முன்னிட்டு, […]
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் மாநில அரசின் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் […]
லக்கிம்பூர் கெரி வன்முறையில் 4 விவசாயிகள் கொல்லப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் 13 பேர் மீது உ.பி நீதிமன்றம் செவ்வாய்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அக்டோபர் 3, 2021 அன்று, உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் வருகைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது ஏற்பட்ட வன்முறையின் போது லக்கிம்பூர் கெரியில் உள்ள டிகுனியாவில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் […]
வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பதாகவே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம், ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக இராணுவ அதிகாரியின் மனைவி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தபோதே ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி காலமானார். அப்பெண் அந்த மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் […]
பசுவின் கன்றை கொன்றதால் தனது மகனையே தேர்க்காலில் ஏற்றி கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி நமது தமிழகம் என்பதில் பெருமை என ஆளுநர் தமிழிசை பேச்சு. புதுச்சேரியின் காரைக்கால் கடற்கரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நீதித் துறை குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்ற கட்டடத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை, ஏழை எளியோருக்கு மருத்துவம் கிடைப்பது […]
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதியளித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில், மறு சீராய்வு மனு தாக்கல். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். […]
குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி கோரி கண்ணன் என்பவர் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நிபந்தனைகளை விதித்து, தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே […]
56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில்,தேனியை சேர்ந்த 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில், போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத நடவடிக்கைகளையும் […]