தமிழ்மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது-பிரதமர் மோடி..!

தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது என்று பிரதமர் மோடி இன்று மங் கி பாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் அகில இந்திய வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது, உலகிலேயே மிக பழமையான தமிழ் மொழி மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் அபிமானி நான் என்று கூறியுள்ளார். மேலும், பஞ்சாப் சீக்கிய குரு தமிழ் மொழி குறித்து பெருமையாக … Read more

புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் – கனிமொழி!

புரியாத மொழியை புகுத்த முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கனிமொழி கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் புரியாத மொழியினை புகுத்த நினைப்பதாகவும் இந்தி தெரியவில்லை என்றால் அரசிடமிருந்து எந்த பதிலும் வருவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியில் தான் கடிதங்கள் கூட அனுப்ப … Read more

மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் நீதிபதி.!

மக்களிடம் மொழி அச்சத்தை ஏற்படுத்த கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார் உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்த போது வீட்டில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தமிழ்நாடு விடுதலை படையின் கலை லிங்கம் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது, நீதிபதி கிருபாகரன் கூறுகையில், மக்களிடையே மொழி குறித்த அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விடுதலை, தமிழ் மொழி என்ற கோஷங்களுடன் செயல்பட்டு … Read more

இந்தி, ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழி – மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்.!

இந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளை அலுவல் மொழியாக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தும் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச்செயலாளர் எம்.பி வைகோ கேள்வி எழுப்பினார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம்,  இந்தி, ஆங்கிலம் … Read more

புதியக்கல்வி கொள்கை – மொழியை திணிப்பது தான் தவறு, கற்பது அல்ல – சரத்குமார்!

மொழியை கற்பது தவறு அல்ல திணிப்பது தான் தவறு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே புதிய கல்விக் கொள்கைக்கு பலராலும் எதிர்ப்பு வரும் நிலையில் இது குறித்து பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய கல்விக் கொள்கையில் கூடுதல் மொழியை கற்றுக்கொள்ள வலியுறுத்தலாமே தவிர திணிக்கக் கூடாது அது தான் தவறு எனக் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் நீர் தேர்வு அவசியமில்லை … Read more

மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஒருமைப்பாடு நிலைக்கும் : கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவரது பாடல்கள் பல சாதனைகளை படைத்து, பல விருதுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, தஞ்சையில் நடைபெற்ற தமிலாற்றுப்படை நூலின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், பேராசிரியர் ஞான சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு பின் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கும், சிந்திக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தை … Read more

தமிழின் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம்

தமிழக  பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 12 ஆம்  வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை  அறிமுகப்படுத்தப்படுத்தியது .12 ஆம்  வகுப்பு  ஆங்கில புத்தகத்தில் தமிழ் மொழி  2300 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது .இது பெரும் சர்சையாக வெடித்தது. பின்னர் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில், 2ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில்உள்ளது  உடனடியாக மாற்றப்படும்.தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில்  தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழின் தொன்மை … Read more