இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா? வைகோ கண்டனம்.!

இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நல்வாழ்வுத் துறையின் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் என்ற கிளை அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இந்தியா முழுவதுமான கிராமப்புறங்களுக்கு தேவையான நல்வாழ்வு பணிகளையும் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பில் அக்டோபர் 8 முதல் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கடைசி நாள் என்று குறிப்பிட்டு இருப்பதாகவும், ஒரு தேதியை மட்டும் குறிப்பிட்டு வரையறுத்தது அப்பட்டமான முறைகேடு எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இது குறித்து பேசிய அவர், இந்தி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த அறிவிப்பின் பத்தாம் பக்கத்தில் கணக்காளர், எழுத்தாளர், மற்றும் கணினி பதிவாளர் ஆகியோர் 40 மதிப்பெண்கள் இந்தியில் தேர்வு எழுத வேண்டும் எனவும், ஆம்புலன்ஸ் மற்றும் கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டுமெனவும், செவிலியர்கள் 10 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பிக்க கூடிய தகுதியும், வேலை வாய்ப்பும் கிடையாது எனவும் கூறப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திக்காரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலையையும் இது உருவாக்கி இருப்பதாக தெரிவித்த அவர், இத்தகைய அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், 40 மதிப்பெண் அல்லது 25 மதிப்பெண்களுக்கு இந்தியில் கேள்வி கேட்கப்பட்டு பதில்களும் இந்தியில்தான் எழுதப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்ற கூடிய முயற்சியை பாஜக அரசு தொடர்வதாகவும் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal