#Breaking:”உயிரிலும் மேலான தொண்டர்கள் என் பக்கம்;யாராலும் என்னை நீக்க முடியாது” – ஓபிஎஸ் பதிலடி!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும்,ஜூலை 11 இல் நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் ஈபிஎஸ் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும், கழகத்தின் தொண்டர்கள் தற்போது ஈபிஎஸ் அவர்களுக்கு தான் ஆதரவாக உள்ளனர் என்றும் அவரது ஆதரவாளரான … Read more

எம்.ஜி.ஆர். போனபோதே கவலைப்படவில்லை.. வைகோவையே தூக்கி எறிந்தோம் – ஆர்எஸ் பாரதி பகிர் பேட்டி

திருச்சி சிவாவின் மகன் பாஜகவில் இணைந்தது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கருத்து. திமுகவில் இருந்து யார் போனாலும் கவலையில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். சென்னை திருநின்றவூரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற அவரிடம், திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் போனபோதே நாங்கள் கவலைப்படவில்லை என்றும் வைகோவையே தூக்கி … Read more

பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!

எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு புரட்சித்தலைவர் “பாரத ரத்னா”  எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து போற்றியமைக்கு பிரதமர் மோடிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், ”ஒரு செயலை செய்து முடிக்க எண்ணுபவர், மிக உறுதியுடன் இருந்தால் அவர் நினைத்தபடியே அந்தச் செயலைச் செய்து முடிப்பார்’ … Read more

எம்.ஜி.ஆர். சிலைக்கு இன்று தமிழக அரசு சார்பில் மரியாதை!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,நடிகரும்,அதிமுக கட்சி நிறுவனருமான எம்.ஜி.ஆர்.அவர்களின் 105 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படவுள்ளது.இந்நிலையில்,எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு … Read more

“விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க,சபதம் ஏற்கிறோம்” – அதிமுகவினர் உறுதிமொழி!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,புரட்சி தலைவருமான டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர் .மேலும்,”விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப,அடியோடு அழிக்க, சபதம் ஏற்கிறோம்” என்று கட்சி ஒருங்கிணப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி. கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கி,1977-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் … Read more

மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆர் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ட்வீட்

மக்களுக்காக பணிகள் செய்து மக்களால் என்றென்றும் போற்றப்படும் எம்.ஜி.ஆரை நினைவுக் கொள்வோம் என அமைச்சர் எல்.முருகன் ட்வீட். அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான எம்ஜிஆரின் 34-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவுதினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும், அரசியல் களத்திலும் பல வெற்றிகளைக் குவித்த எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை … Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று..!

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் … Read more

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளை அழியாமல் காப்பதே முதல் கடமை- சசிகலா!

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதிகளை அழியாமல் காப்பதே முதல் கடமை என சசிகலா கூறியுள்ளார். அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கருதியதாகவும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் தனித்துவமான சட்ட விதியை எம்ஜிஆர் உருவாக்கியதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஆனால் தற்பொழுது அதனை மாற்றும் வகையில் ஒரு சிலர் செயல்படுவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் … Read more

எம்ஜிஆருக்கு தன் கிட்னியை தானமாக கொடுத்த எம்ஜிஆரின் அண்ணன் மகள் காலமானார்..!

எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகளான லீலாவதியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். எம்ஜிஆர் அவர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நாளிதழில் பார்த்த லீலாவதி அவர்கள் தனக்கு … Read more

“புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும்,எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர்” – சீமான்…!

இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் விடுதலைப்புலிகளுக்கும், எம்.ஜி.ஆர்.க்கும் உறவுப் பாலமாகச் செயல்பட்டவர் என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமான புலமைபித்தன்(86) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புகழ்பெற்ற கவிஞர்,திரைப்பாடலாசிரியர்,பேரவைப் புலவர்,மூத்த அரசியல்வாதி, எனப் பன்முக ஆளுமை கொண்ட ஐயா புலவர் புலமைப்பித்தன் … Read more