வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

mk stalin

MK Stalin : பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் … Read more

“பெற்றோர்களே…கட்டணமின்றி புத்தகங்கள்,இலவச பேருந்து வசதி” – முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி எனவும், பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை இனியும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து குறிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: “குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்;குழந்தைப் பருவம் … Read more

“கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது;ஆதீனத்தின் மேல் கை வைத்து பாருங்கள்” – அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து … Read more

“மனச்சாட்சி இல்லாத செயல்;இதுதான் திமுக சொன்ன விடியலா?” – டிடிவி தினகரன் கண்டனம்!

சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்: அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் … Read more

பாராட்டிய பொருளாதார ஆலோசகர் – உறுதியளித்த முதல்வர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (29.3.2022) முகாம் அலுவலகத்தில்,முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள் சந்தித்துப் பேசினார். பாராட்டிய எஸ்தர் டப்லோ: இந்த சந்திப்பின்போது,பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள்,கொள்கை முடிவுகளுக்கும்,அரசு முதலீடுகளுக்கும் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலையான உறுதிப்பாட்டை பாராட்டினார். மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான … Read more

“இது 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகிதம்;40 இலட்சம் பேர் பாதிப்பு” – ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

நடப்பு நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50% லிருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய,மாநில அரசுகளை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ஆரிக்கையில் அவர் கூறியதாவது: பேரறிஞர் அண்ணா கூறியது: ‘தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு … Read more

“டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது,கிராமசபை தீர்மானம் கசக்கிறதா?”-மக்கள் நீதி மய்யம் கேள்வி!

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் கடை திறந்து மது விற்பனை செய்ய முடியாது என்றும்,மதுக்கடை அமைப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் பட்சத்தில் அதை ஆட்சியர் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது,கிராமசபை தீர்மானம் கசக்கிறதா? என்று  மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் … Read more

“திமுக என்பது ஒரு குடும்ப கட்சி;தூக்கத்திலிருந்து அமைச்சர் விடுபட வேண்டும்” – ஓபிஎஸ் பதிலடி!

திமுக என்பது ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் என்றும்,எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது எனவும்,அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில்,கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் … Read more

“மக்களை ஏமாற்றிய திமுக…இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?” – டிடிவி தினகரன் கேள்வி!

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் … Read more

“வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் விலை இவ்வளவா?…திமுக அரசே,கட்டுப்படுத்த நடவடிக்கை எடு” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் … Read more