சசிகலா காலில் சில்லறை தேடும் இபிஎஸ்.! உதயநிதி கடும் விமர்சனம்

Edappadi Palanisamy - Udhayanidhi stalin

Udhayanidhi Stalin : சசிகலா காலில் சில்லறை தேடிய எடப்பாடி பழனிச்சாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம். வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் கடந்த தேர்தலில் ஒரு மனதாக … Read more

நான் ஏன் சசிகலா காலில் விழுந்தேன்.? விளக்கம் தந்த இபிஎஸ்.!

Edappadi Palanisamy

EPS : நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர். … Read more

சசிகலா – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

ops and sasikala

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு, நினைவு இடத்திற்கும் சென்று அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக சார்பி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதி பேரணி இன்று காலை நடைபெற்றது. இந்த பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். சேப்பாக்கத்தில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி சென்ற திமுக பேரணி, சென்னை மெரினாவில் … Read more

எல்லாரையும் எங்களுடைய அதிமுகவைச் சேர்ந்தவர்கள்- சசிகலா..!

Sasikala

தமிழக முன்னாள்  முதல்வரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள்  மலர்தூவி மரியாதை செய்தனர். பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் திமுகவினர் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. பிப்.8 திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! இதற்கிடையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி … Read more

இத்தனை ஆண்டுகளாக கொடநாடு வராதது ஏன்? – மனம் திறந்த சசிகலா

vk sasikala

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக சசிகலா, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டுக்கு நேற்று மாலை வந்தடைந்தார். கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா பெயரில் தியான மடம் மற்றும் சிலை அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக, சசிகலா அங்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் சசிகலா, எஸ்டேட் … Read more

7 ஆண்டுகளுக்கு பிறகு கொடநாட்டில் காலடி வைக்கும் சசிகலா… காரணம் இதுதான்!

vk sasikala

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் நிலையில்,  7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று புறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில நாட்களிலேயே அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர், சொத்துக்குவிப்பு … Read more

புயல் பாதிப்புகளை கையாள அரசுக்கு தெரியவில்லை – சசிகலா

கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை … Read more

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

vk sasikala

அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, விகே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு, அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை பூகம்பமாக வெடித்து ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக … Read more

சசிகலா சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய் – ஜெயக்குமார்

திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் என ஜெயக்குமார் விமர்சனம்.  சுனாமி நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்திய பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவின் பி டீம் ஆக பண்ருட்டியார் செயல்படுகிறார் வளர்ந்த கட்சியைப் பற்றியே விமர்சனம் செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவை இணைக்க பேச்சு நடப்பதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் … Read more

அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது.!- சசிகலா பேட்டி.!

அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சசிகலா பேட்டியளித்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலரும் தங்கள் இரங்கலை எம்ஜிஆர் நினைவிடத்தில் செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் வி.கே.சசிகலா தனது ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது என குறிப்பிட்டார். மேலும் அவர் … Read more