வாரி வாரிக் கொடுத்த வள்ளல் – ஈபிஎஸ் ட்வீட்

எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி என ஈபிஎஸ்  ட்வீட்.  இன்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் … Read more

ஏழைகளுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கிறது..! முன்னாள் அமைச்சர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது என சுவரொட்டி ஒட்டிய முன்னாள் அமைச்சர்.  வரும் 24-ஆம் தேதி  மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, ராமநாதபுரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சுவரொட்டி ஒட்டியுள்ளார். அந்த சுவரொட்டியில், ‘தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி சிதறி கிடக்கின்றது. நாங்கள் பதறி துடிக்கின்றோம். காப்பாற்றுங்கள்.’ என எழுதப்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நினைவு தினம் இன்று..!

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு தினம். புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் … Read more