மீண்டும் ஆஸ்கர் விருது விழாவில் RRR படத்தின் "நாட்டு நாட்டு" பாடல்.!

Mar 11, 2024 - 07:52
 0  1
மீண்டும் ஆஸ்கர் விருது விழாவில் RRR படத்தின் "நாட்டு நாட்டு" பாடல்.!

RRR Movie: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடல் இடம்பெற்று கவனத்தை ஈர்த்தது.

READ MORE - Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வென்றவர்களின் முழு பட்டியல் இதோ.!

2023 ஆம் ஆண்டில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதினை ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் வென்று வரலாறு படைத்தது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான (2024) சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வழங்கும் போது, ​​இந்த பாடலின் காட்சிகள் பிரமாண்ட திரையில் காட்சிப்படுத்தப்பட்டன.

READ MORE - Oscar 2024 : 10 விருதுக்கு பரிந்துரை! ஆனா ‘Killers of the Flower Moon’ படத்துக்கு ஒரு விருது கூட இல்லை!

இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை, பில்லி எலிஷ் மற்றும் ஃபின்னியாஸ் ஓ'கானல் ஆகியோர் வென்றனர். இவர்களது பெயரை மேடையில் வசிக்க, அவர்கள் மேடை ஏறி நடந்து வரும்பொழுது, இவர்களது பின்னணியில் 'நாட்டு நாட்டு' பாடல் திரையிடப்பட்டது. இது இந்திய திரைப்படத்திற்கும் கிடைத்த பெருமை என்றே எண்ணலாம்.

READ MORE - உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது!

இந்த தருணத்தை 'RRR' திரைப்பட தயாரிப்பாளர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், வீடியோவாக பகிர்ந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், இது வரையிலான அற்புதமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பிரம்மாண்ட திரையில் திரையிட பட்டது. அதில், ஆர்ஆர்ஆர் படத்தின் ஸ்டண்ட் கட்சிகளும் இடம்பெற்றிந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow