உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது!

Ukraine : உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லை பகுதிகளில் உக்ரனைக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த தொடர் தாக்குதலால் இருதரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

Read More – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கிய நம்ம பீக்கி பிளைண்டர்ஸ், அயர்ன் மேன் நாயகர்கள்.!

எனவே, இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டிற்கு முதல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More – ஐயோ ச்சி! நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன ஆஸ்கர் அரங்கம்!

அதில் குறிப்பாக கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒபன்ஹைமர்’ திரைப்படம் பல்வேறு பிரிவுகளின் ஆஸ்கர் விருதுகளை குவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 20 Days in Mariupol-க்கு சிறந்த ஆவண படத்திற்க்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டிற்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதை பெற்ற 20 Days in Mariupol ஆவண படத்தின் இயக்குநர் எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ், இது உக்ரைனுக்கு கிடைத்த முதல் ஆஸ்கர் விருது என்று சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

Read More – தேமுதிக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்? பிடிவாதம் பிடிக்கும் பிரேமலதா!

மேலும், 20 Days In Mariupol எனும் இப்படத்தை ஆவணப்படமாக எடுக்க விருப்பம் இல்லை என கூறிய இயக்குநர் எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பற்றியும், அதன் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment