ஐயோ ச்சி! நிர்வாணமாக வந்த ஜான் சீனா.. அதிர்ந்து போன ஆஸ்கர் அரங்கம்!

Oscars 2024 : சினிமா துறையில் மிகவும் பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  96- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை வழங்க WWF மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா நிர்வாணமாக மேடையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More – 96வது ஆஸ்கர் விருது கொண்டாட்டம்… ஓபன்ஹைமருக்கு குவியும் விருதுகள்…

ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்க பிரபல குத்து சண்டை வீரர் ஜான் சீனா வருவார் என்று கூறினார். அதற்கு முன்பு ஒரு மனிதர் ஆடை இல்லாமல் மேடையில் தோன்றினால் பைத்தியக்காரதனமாக இருக்கும் அல்லவா? என்று கேட்டார்.

Read More – குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்..! அயோக்கியர்கள்… மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை திட்டி தீர்த்த எழுத்தாளர் ஜெயமோகன்

அதற்கு ஜான் சீனா மேடையின் பின்பு நின்று கொண்டு நான் வரலாமா? என்று கேட்டார். அந்தரங்க உறுப்புகளை மறைத்த படி அவர் கேலியாக வந்தது அங்கு இருந்த அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது என்றே கூறலாம். தொகுப்பாளர் மற்றும் விருது வாங்க வந்த பிரபலங்கள் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தார்கள்.

Read More – டைட்டான உடை…ஆனா அத காமிக்கல.! ராசி கன்னாவின் கவர்ச்சி போஸ்…

பிறகு லைட் அணைக்கப்பட்டு ஜான் சீனாவுக்கு உடை உடுத்தப்பட்டது. பின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் யார் என்ற விருதையும் ஜான் சீனா அறிவித்தார். ஜான் சீனா நிர்வாணமாக ஆஸ்கர் மேடைக்கு வந்தது ஒரு பக்கம் சிரிப்பை ஏற்படுத்தினாலும் மற்றோரு பக்கம் சர்ச்சை ஆகி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவை பார்த்த பலரும் அவ்வளவு பெரிய மேடைக்கு இப்படியா? செல்வீர்கள் என கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment