என் மனைவி உயிரோடு இருக்க காரணம் ரஜினி சார் தான்! நடிகர் லிவிங்ஸ்டன் உருக்கம்!

Mar 6, 2024 - 06:38
 0  0
என் மனைவி உயிரோடு இருக்க காரணம் ரஜினி சார் தான்! நடிகர் லிவிங்ஸ்டன் உருக்கம்!

Rajinikanth நடிகர் ரஜினிகாந்த் தன்னுடன் பணியாற்றும் பிரபலங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே பல உதவிகளை செய்து வருகிறார். இதனை அவருடன் பணியாற்றிய பிரபலங்களும் பேட்டிகளில் வெளிப்படையாகவே சொல்வது உண்டு. அப்படி தான் லால் சலாம் படபிடிப்பு நேரத்துல லிவிங்ஸ்டன் மனைவி உடல்நிலை சரி இல்லாம இருந்ததை கேள்வி பட்டு 15 லட்சம் கொடுத்து ரஜினிகாந்த் உதவி செய்துள்ளார்.

read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க!

இந்த தகவலை உருக்கமாக நடிகர் லிவிங்ஸ்டனே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன் " சமீபத்தில் என்னுடைய மனைவிக்கு மாரடைப்பு பிரச்சனை வந்துவிட்டது. அதில் நானும் என்னுடைய குடும்பமும் அடைந்துவிட்டோம். 1 மாதம் தான் என்னுடைய மனைவி உயிருடன் இருப்பார் என்று சொல்லிவிட்டார்கள். இதனை கேட்ட என்னுடைய குழந்தைகளும் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டார்கள்.

read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

அந்த சமயத்தில் தான் நான் லால் சலாம் படத்திலும் நடித்து கொண்டு இருந்தேன். அப்போது இதனை பற்றி படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனர்கள் பேசி கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்கள் பேசிய விஷயம் எப்படியோ ரஜினிகாந்த் சாருக்கு தெரிந்துவிட்டது. அந்த நிமிடமே வேகமாக என்னை அழைத்து விவரத்தை விசாரித்தார். நானும் மனைவியின் உடல் நிலை பற்றி அவரிடம் எடுத்து சொன்னேன்.

சொன்ன அடுத்த நிமிடமே 15 லட்சம் ரூபாய் அவர் எனக்கு கொடுத்தார். எனக்கு வாங்கவே யோசனையாக இருந்தது. ஏனென்றால், எனக்கு நிறையவே கடன் இருக்கிறது. எனவே, இதனை எப்படி வாங்க என்று யோசித்தேன். பிறகு அவரே சொன்னார். ஒரு சகோதரர் கொடுத்தா பணம் வாங்க மாட்டியா? நான் உன்னுடைய சகோதரர் மாதிரி இந்த பணத்தை வைத்து கொள் என்று கூறினார்.

read more- ஓரமா போமா! அம்பானி மகன் திருமண விழாவில் கடுப்பான ரஜினிகாந்த்?

இன்னும் பணம் வேண்டும் என்றாலும் கூட தாராளமாக என்னிடம் சொல்லு நான் தருகிறேன் என்று கூறினார். எனக்கு மட்டுமில்ல அவருடைய அலுவலகத்திற்கு சென்று பார்த்த பிறகு தான் தெரிகிறது நிறைய பேருக்கு அவர் உதவி செய்கிறார். இன்று என்னுடைய மனைவி உயிரோடு இருக்க காரணம் அவர் தான்" எனவும்  லிவிங்ஸ்டன் சற்று உருக்கமாக பேசியுள்ளார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow