விஜய் தேவரகொண்டா படத்திலிருந்து பிரதான காட்சிகளை வெட்டி நீக்கியது படக்குழு!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் டியர் காம்ரேட். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருந்தாலும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததன் பெயரில் படத்தில் இருந்து தேவையில்லாமல் இருந்த 14 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

biggboss 3: லூசுனா கெட்ட வார்த்தையா? சரவணனை சண்டைக்கு இழுக்கிறாரா சேரன்? நடந்தது என்ன?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்களுக்கு சினிமா கதாபாத்திரங்கள் போல நடிக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், சரவணன் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் ஒழுங்காக நடிக்கவில்லை என சேரன் … Read more

ஒரே பள்ளியை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோருக்கு காசநோய் பாதிப்பு! அதிகாரிகள் அதிர்ச்சி!

சுகாதாரத்துறை அதிகாரிகள் தென்மேற்கு ஜெர்மனியின் bad schornborn என்ற பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது, ஒரே பள்ளியை சேர்ந்த 109 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதில் இரண்டு மாணவர்களுக்கு, மற்றவர்களை பாதிக்கும் அளவில் மோசமான காசநோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து அகற்றப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பயிலும் 56 மாணவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த … Read more

கட்டாய வாக்களிப்பு பற்றிய பொதுநல வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி பதில்!

நம் நாட்டில் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமில்லை. விருப்பம் இல்லையென்றால் வாக்களிக்க தேவையில்லை என்றுதான் இருந்து வருகிறது. இந்த வழக்கத்திற்கு எதிராக, கட்டாயமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி இன்று விசாரிக்கையில், மத்திய அரசு சார்பில், வாக்களிப்பது தொடர்பான கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடமே அளிக்க வேண்டும் என கூறியது. இதனை ஏற்று இந்த வழக்கை தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றம்!

முதல் தீவிரவாதி ஒரு இந்து ! கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதற்கு  கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.மேலும் கமல்ஹாசன் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்து சேனா அமைப்பு சார்பாக டெல்லி பாட்டியாலா … Read more

மக்களே உஷார்: உங்கள் வீட்டின் சுவரில் இந்த குறியீடு இருந்தால் ஜாக்கிரதை!

சமீப காலமாக தமிழகத்தில் கொலை , கொள்ளை போன்ற  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமான முறையில் நடைபெறுகிறது. இந்நிலையில் மதுரையில் ஒரு  கொள்ளை கும்பல் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கமே ஆள் இருக்கும் வீடு ,  இல்லாத வீடு என கண்டுபிடித்து. ஆள் இல்லாத வீட்டில் இந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் ஒரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு  என்ற … Read more

வேலூரில் தேர்தல் ஆணையம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் செயல்படுகிறது-தமிழிசை

சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, எனக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று ஆதங்கப்படும் சீமானின் அக்கறைக்கு நன்றி என்று கூறினார். மேலும் வேலூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டம் நடத்திய மண்டபத்திற்கு  சீல் வைக்கப்பட்டதற்கு காரணம்  முறையான அனுமதியின்றி கூட்டம் நடத்தியது தான். தேர்தல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் யாராக இருந்தாலும் நடக்க வேண்டும் .ஆனால்  மீறும்பட்சத்தில் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே … Read more

கரூர் இரட்டை கொலை வழக்கு! ஆய்வாளர் பாஸ்கரன் அதிரடி சஸ்பெண்ட்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளங்களை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் பேரில் குளத்தின் ஆக்கிரப்பு பகுதிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இந்த குளம் ஆக்கிரமிப்பில் காட்டி கொடுத்ததாக கூறி, தந்தை வீரமலை,  மற்றும் அவரது மகனான  நல்ல தம்பியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.   இது தொடர்பாக 6 பேர் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கில் சரியாக விசாரணை நடைபெறவில்லை என கூறி, ஆய்வாளர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி!

சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ரூ.496 உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.62 விலை உயர்ந்து, ரூ.3,372-க்கு, சவரனுக்கு ரூ.496 உயர்ந்து ரூ.26.976-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.44.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள உயர்வு பொதுமக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் கபடியை கையில் எடுத்து மிரட்டும் சுசீந்திரன்! கென்னடி கிளப் ட்ரெய்லர் இதோ!

தமிழ் திரையுலகில் நல்ல இயக்குனராக வளர்ந்து இருப்பவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கென்னடி கிளப். இந்த படத்தில் சசிகுமார், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு இமான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில், சசிகுமார் முன்னாள் கபடி வீரராகவும், பாரதிராஜா கபடி கோச்சாகவும், நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவரும் படி உள்ளது. … Read more