உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக உயர்வு..!

உலக அளவில் கொரோனா பாதிப்பு 21.3 கோடி ஆக தற்போது அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியது. உலக நாடுகளை பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனாவால், பல்வேறு பாதிப்புகளையும் இழப்புகளையும் உலக நாடுகள் சந்தித்து வருகிறது. தற்போது உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21.3 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்தில் உள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 3.8 … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு 20 கோடியை தாண்டியது..!

உலகளவில் கொரோனா பாதிப்பு 200,933,269 கோடி பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா தொற்று பரவல் உலக நாடுகளை பெரியளவில் பாதித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி உலக நாடுகளில் வேகமாக நடைபெற்று வருகிறது. உலககில் … Read more

நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளம்..!

நியூசிலாந்தில் நூற்றாண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அஞ்சி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய நாடு நியூசிலாந்து.  இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் தற்போது அங்கு மிக மோசமான அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள கர்டர்பி மாகாணத்தில் பெருமளவு மழை பெய்ததால் அங்குள்ள ஆறு மற்றும் நீர்ப்பாசன வசதிகள் அனைத்தும் நிரம்பி அபாய கட்டத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள 3000 க்கும் அதிகமான குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு … Read more

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அழிந்ததாக நினைத்த கலபகோஸ் ஆமை ஈக்வடாரில் கண்டுபிடிப்பு..!

ஆமைகள் பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக நினைத்த கலபகோஸ் ஆமை தற்போது பெர்னாண்டினாவின் கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி சுற்றுசூழல் அமைச்சர் குஸ்டாவோ மரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த காலபோஸ் ஆமை 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது.  ஆனால் அது உயிரோடு இருப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் இந்த செலோனாய்டிஸ் பாண்டஸ்டிகஸ் ஆமை கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸ் மேற்கொண்ட … Read more

உலகளாவிய பயணத்திற்கான தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படும் – ஐரோப்பிய ஒன்றியம் தகவல்

சர்வதேச நாடுகளுக்கிடையே பயணம் செய்ய தடுப்பூசி பாஸ்போர்ட் எவ்வாறு செயல்படுமென ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு. கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலால் கடந்த வருடம் முதல் உலக நாடுகளுக்கு இடையே அனைத்து விமான பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் அதனை சரி செய்யும் விதமாகவும் மற்றும் மற்றொரு கோடைகாலத்தை இழப்பதைத் தவிர்க்கவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் விமானத் தொழில் நிறுவனங்கள், சில ஆசிய அரசுகள் ஆகியவை ஒன்றினைந்து கொரோனா தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து பயணிகள் … Read more

இலங்கை துறைமுகம் அருகே தீ விபத்தில் சிக்கிய ‘X-Press Pearl’ சரக்கு கப்பல்..!

சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான எம்வி எஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு கப்பலில் இந்தியாவில் இருந்து நைட்ரிக் ஆசிட் உட்பட வேதிப்பொருட்களை 1,486 கண்டெய்னர்களில் ஏற்றிக்கொண்டு இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு நுழைவதற்கான அனுமதிக்காக 9.5 நாட்டிக்கல் தொலைவில் கடலில் நின்றுள்ளது. அந்த நேரத்தில் அதிலிருந்த வேதிப்பொருட்களின் காரணமாக திடீரென்று கப்பலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த … Read more

ஏழை நாடுகளுக்கு 10 கோடி தடுப்பூசி வழங்கப்படும் – ஐரோப்பிய கூட்டமைப்பு அறிவிப்பு..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை நாடுகளுக்கு உதவும் பொருட்டு ஐரோப்பிய கூட்டமைப்பு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளது.  கொரோனாவால் உலகமே அஞ்சி இருக்கும் நிலையில் தடுப்பூசியை மட்டுமே உலக மக்கள் நம்பியுள்ளனர். ஆனால் தடுப்பூசி அனைவருக்கும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையில், வளர்ச்சியடைந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரித்து வழங்கி உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது. ஏழை நாடுகளுக்கு முழுமையாக தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. … Read more

பிரேசில்: உருமாறிய கொரோனாவால் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு..!

உருமாறிய கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை பிரேசிலில் அதிகரித்துள்ளது.  உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடு பிரேசில். இங்கு தொற்று எண்ணிக்கை இந்தியாவை விட குறைவு. ஆனால், பிரேசிலில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இந்தியாவை விட அதிகமாக உள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 37,498 பேருக்கு … Read more

எரிமலை வெடித்து சிதறியதால் காங்கோ நாட்டில் நெருப்புக்குழம்பு..!

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் கோமா என்ற பெரிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகாமையில் மவுன்ட் நிரயகாங்கோ என்ற மிகப்பெரிய எரிமலை உள்ளது. இந்த எரிமலை சீற்றத்துடன் காணப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு அறியப்பட்டது. அதனால் எரிமலை வெடித்தவுடன் அருகில் வசித்து வந்த மக்களை வேறு பகுதிக்கு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கே அருகில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெளியேற்றப்பட்ட மக்களின் … Read more

உலகிலேயே அதிக வெப்பநிலை உள்ள இடம் ஈரானின் லூட் பாலைவனமா..!

உலகத்தில் உள்ள அதிக வெப்பநிலை உள்ள பகுதியாக தற்போது ஈரானின் லூட் பாலைவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகத்தில்  வெப்பநிலை அதிகரித்து கொண்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெத் வேலி என்ற இடம் உள்ளது. இதுவே இதற்கு முன் உலகத்தில் உள்ள மிக அதிகமான வெப்பநிலை கொண்ட இடமாக இருந்து வந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் கிட்டத்தட்ட 134 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருந்ததாக பதிவிட்டனர்.  தற்போது இந்த இடத்தை முறியடித்து ஈரானின் லூட் … Read more