மக்களே உஷார்: உங்கள் வீட்டின் சுவரில் இந்த குறியீடு இருந்தால் ஜாக்கிரதை!

சமீப காலமாக தமிழகத்தில் கொலை , கொள்ளை போன்ற  சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கொள்ளை சம்பவங்கள் மிக நூதனமான முறையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மதுரையில் ஒரு  கொள்ளை கும்பல் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். இவர்களின் நோக்கமே ஆள் இருக்கும் வீடு ,  இல்லாத வீடு என கண்டுபிடித்து. ஆள் இல்லாத வீட்டில் இந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்து வருகின்றனர்.

Image result for கொள்ளை கும்பல்

ஆள் இல்லாத வீட்டை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்றால் ஒரு குழு மக்கள் தொகை கணக்கெடுப்பு  என்ற பெயரில் டிப்டாப் உடை மற்றும் அடையாள அட்டையுடன் அரசு அதிகாரிகள் போல செல்கின்றனர்.

அங்கு ஒவ்வொரு வீடாக செல்லும் இந்த கொள்ளை கும்பல் ஆள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களிடம் ஆள் இல்லாத வீட்டின்  விபரங்களை தெரிந்து கொள்கின்றனர். அதாவது அவர்கள் எப்போது வருவார்கள் ,எங்கு சென்று இருக்கிறார்கள் .

Image result for கொள்ளை

அந்த வீட்டில் எத்தனை நபர்கள் உள்ளார்கள் போன்ற விபரங்களை அந்த  கொள்ளை கும்பல் ஆள் இருக்கும் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு  தெரிந்து கொள்கின்றனர்.பின்னர் ஆள் இல்லாத வீட்டில் என்ற குறியும் , ஆள் இருக்கும் வீட்டில் ஏன்ற குறியும் குறித்து விட்டு செல்கின்றனர்.

பின்னர் வரும் இரண்டாவது குழு அந்த குறியீட்டை  வைத்து கொள்ளை சம்பவங்களை நடத்துகின்றனர். சமீப காலமாக நடைபெற்ற அனைத்து  கொள்ளை சம்பவங்களும் X குறியீடு இருக்கும் வீடுகளில் அதிகமாக கொள்ளையடித்து உள்ளதாக மதுரை காவல்த்துறை தெரிவித்து உள்ளனர்.

Image result for கொள்ளை கும்பல்

இதுகுறித்து  மதுரை காவல்துறை  கூறுகையில் , வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் தங்கள் வீடு மற்றும் பயண விபரம் ஆகியவற்றை காவல் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர் .

இதற்காக மதுரை காவல்துறை  பிரத்தேகமாக மதுரை காவலன் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற நூதனமான முறையில் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

Image result for மதுரை காவலன் செயலி

இந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு  என்ற பெயரில் அரசு அதிகாரிகள் என கூறி  உங்கள் வீட்டு விபரங்கள் அல்லது பக்கத்து வீட்டின் விபரங்களை கேட்டால்  நீங்கள்  அவர்கள் அரசு அதிகாரிகள் தான என தெரிந்த பிறகு விரங்களை கொடுக்கவேண்டும். உங்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் இருந்தால் காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என காவல் துறை சார்பில் கூறப்பட்டு உள்ளது.

author avatar
Dinasuvadu desk