நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம் போடும் மடோனா! வைரலாகும் வீடியோ!

Nov 1, 2023 - 06:54
 0  0
நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம் போடும் மடோனா! வைரலாகும் வீடியோ!

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மடோனா விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் நடனம் ஆடி வீடியோவை வெளியீட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், லியோ படத்தில் நடித்திருந்த நடிகை மடோனா மற்றும் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டினாவாக நடித்திருந்த வசந்தியும் நா ரெடி தான் பாடலுக்கு நடனம் ஆடி பயிற்சி செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நா ரெடி தான் பாடலில் ஒரு சில காட்சிகளில் நடனம் ஆடி இருப்பார்.

அதனை தனியாக பயிற்சி எடுத்தால் நன்றாக இருக்காது என்று எண்ணி வசந்தி உடன் இணைந்து அவர் பாடலுக்கு நடன பயிற்சி செய்தார். வசந்தி ஏற்கனவே நடன கலைஞர் என்பதால் மடோனாவுக்கு இந்த பாடலில் நடனம் ஆட சில டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். நடனம் ஆடி முடித்த பிறகு மாஸ்டர் பார்த்து வியந்து மடோனாவை பாராட்டவும் செய்தார்.

 லியோ படத்தில் நடிகை மடோனா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட அவருடைய கதாபாத்திரமும் பேசப்பட்டு வருகிறது. மேலும். லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டு இருக்கும் நிலையில், வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow