மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்.!

Nov 13, 2023 - 06:57
 0  0
மனிதர்கள் மீது மிதித்து ஓடும் மாடுகள்.. ம.பி.யில் வித்தியாசமான தீபாவளி கொண்டாட்டம்.!

நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு புராண கதைகள் வழியாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டாலும் , அனைத்து கதைகளும் ஒரே நாளில் அமைந்து இருப்பது ஆச்சர்யமான உண்மை.

5 நாள் திருவிழவாக வெவ்வேறு மத சடங்குகள் உடன் வடமாநிலங்கள் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி மறுநாளான இன்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் மாடுகளை தங்கள் மீது ஓட வைத்து வித்தியாசமான முறையில் அப்பகுதி மக்கள் மத சடங்குகளை மேற்கொள்கின்றனர். வெவ்வேறு இடங்கள்.. வெவ்வேறு கொண்டாட்டங்கள்.. ஒரே ஒரு தீபாவளி பண்டிகை.!

உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பட்நகர் தெஹ்சில் பிடவாட் கிராமத்தில் இந்த திருவிழா நடைபெற்றது. அப்போது மாடுகள்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், சில நபர்கள் அதன் முன் படுத்து விடுகின்றனர்.

அப்போது கீழே படுத்து இருந்து நபர்கள் மீது அந்த அலங்கரிக்கப்பட்ட மாடுகள், கன்றுக்குட்டிகள் ஓடுகின்றன. மாடுகளை தங்கள் மீது மிதித்து ஓட விடுவதன் மூலம் தாங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும் என அந்த பகுதி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow