இந்தியாவுக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை.! – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி விளக்கம்.!

இந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை. – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.

அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, இந்திய ஜனநாயகம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளும் கட்சியின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறோம் என ஆளும் பாஜக அரசு பற்றி குற்றம் சாட்டி இருந்தார்.

ராகுகாந்தி – மன்னிப்பு :

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியாவை ராகுல்காந்தி அவமதித்து விட்டார் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி :

பிரிட்டனில் நேற்று இந்தியா திரும்பிய ராகுல் காந்தி, கடந்த 2 நாட்களாக பாராளுமன்ற கூட்ட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த அவர், இன்று, கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

மறுப்பும்.. விளக்கமும்.. :

அதற்காக இன்று ராகுல்காந்தி பாராளுமன்றம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை. என கூறினார். மேலும், என்னை நாடாளுமன்றத்தில் பேச அனுமதித்தால். இது குறித்து உரிய விளக்கம் அளிப்பேன் எனவும் அவர் கூறினார்.

Leave a Comment