உலகளவில் நிலவி வரும் மெமரி சிப் (RAM & Storage) தட்டுப்பாடு மற்றும் கூடுதல் செலவினங்கள் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தனது மேக்புக்ஸ் (MacBooks), ஐபேட்ஸ் (iPads) மற்றும் ஹோம்டாட் (HomePod) போன்றவற்றின் விலையை அண்மையில் கணிசமாக உயர்த்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது சந்தையில் இருக்கும் 'iPhone 17 Series' போன்களின் விலையையும் ஆப்பிள் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.35,000 வரை அதிரடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகப் பிரபல டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி (Sanju Choudhary) புதிய தகவல் ஒன்றை உடைத்துள்ளார்.

டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள விபரங்களின்படி, ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை அதன் தற்போதைய விலையில் இருந்து ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை பின்வருமாறு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது:

இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தால், ஆப்பிளின் பிரீமியம் போன்கள் அதன் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் (Android Flagship) போட்டி போன்களை விட மிக அதிக விலையுடையதாக மாறிவிடும்.

இருப்பினும், நீங்கள் ஒரு புதிய ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், வரும் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கவிருக்கும் Flipkart GOAT Sale உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையப்போகிறது. ஏனெனில், இந்த விலை உயர்வு வதந்திகளுக்கு மத்தியில் பிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 17 சீரிஸ் மற்றும் பழைய மாடல்களுக்குப் பிரம்மாண்ட டிஸ்கவுண்ட்களை தற்பொழுது டீஸ் (Tease) செய்துள்ளது. வங்கி ஆஃபர்கள் (Bank Discounts) மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Offers) உள்ளிட்ட சலுகைகளுடன் சேலில் கிடைக்கவிருக்கும் போன்களின் விலை விபரங்கள்:

இந்த சலுகை விலையிலான ஸ்டாக்குகள் (Stocks) மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கும் என்பதால், ஆப்பிள் நிறுவனம் விலையை அதிகாரப்பூர்வமாக உயர்த்துவதற்கு முன்பாக, இந்த பிப்கார்ட் சேலில் முந்துவதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.